விருதுநகர் வேலூரை தொடர்ந்து அம்பத்தூர் அருகே மாணவி பாலியல் பலாத்காரம்.

அம்பத்தூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5பேர் கொண்ட போதை கும்பல் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் கூட்டு பாலியல் விவகாரம் வேலூர் டாக்டர்கள் பாலியல் பலாத்காரம் அடங்கும் முன்னர் செங்குன்றத்தில் மாணவி ஒருவருக்கு நிகழ்ந்துள்ள பாலியல் அத்துமீறல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்பத்தூர் அருகே செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தந்தை லாரி டிரைவராக உள்ளார். இவரது தாய் பிரிந்து சென்று விட்டார்.
இதனால் தனது 15 வயது அண்ணன் மற்றும் பாட்டியுடன் வசித்து வரும் சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் 5 பேர் கொண்ட போதை கும்பல் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்று பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது,

குடிப்பழக்கம் கொண்ட எனது தந்தை அடிக்கடி வீட்டுக்கு வர மாட்டார். தாயும் வேறு ஒருவருடன் சென்று விட்டார். இதனால் எனது அண்ணன்தான் என்னை படிக்க வைத்து வருகிறார்.

இந்த நிலையில் போதையில் வீட்டுக்கு வந்த 5 பேர் எனது அண்ணனை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் அவன் திருத்தணியில் உள்ள பெரியப்பா வீட்டுக்கு சென்று விட்டான்.
இதனால் நான் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட 5 பேரும் கடந்த மாதம் 8-ந்தேதி நள்ளிரவு 2 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். தூங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி 5 பேரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் என்னிடம் மிகவும் தகாத முறையில் நடந்து கொண்டனர்.

இதன் பிறகு கடந்த 2 மாதங்களாக போதை கும்பலைச் சேர்ந்த 5 பேரும் அடிக்கடி வீட்டுக்கு இரவு நேரத்தில் வந்து தாங்க முடியாத அளவுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். 5 பேரும் என்னை கட்டிலில் தள்ளி விட்டு பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தனர். அவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

நாங்கள் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று அந்த கும்பல் மிரட்டி வருகிறது.எனவே என்னைபாலியல் ரீதியாக துன்புறுத்திக் கொண்டிருக்கும் 5 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு 7-ம் வப்பு மாணவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாலியல் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஆவடி போலீஸ் கமி‌ஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை கும்பல் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 5 பேரையும் அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் வேலுாரில், பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தகவல் தெரிவிக்காத மூன்று போலீசார் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் டாக்டர் ஒருவர், கடந்த 17 ல் அதிகாலை 1:00 மணிக்கு, காட்பாடி காலக்சி தியேட்டரில் இருந்து ஆண் நண்பர் ஒருவருடன், வேலுார் ஆற்காடு சாலையில் உள்ள சி.எம்.சி., மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றார். ஆட்டோவில் இருந்த ஐந்து பேர் சத்துவாச்சாரி பாலாற்றங்கரைக்கு கடத்திச் சென்று அந்த பெண் டாக்டரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

கடந்த 22 ம் தேதி ஆன் லைனில் பெண் டாக்டர் கொடுத்த புகாரின் பேரில் வேலுார் வடக்கு போலீசார் மணிகண்டன், 20, பரத் , 20, மற்றும் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவான ஆட்டோ டிரைவர் சந்தோஷ் (21) போலீசார் நேற்று கைது செய்தனர்.இந்த வழக்கில் முறையாக செயல்படாமலும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத வேலுார் வடக்கு போலீஸ் தனிப்பிரிவு போலீஸ் நித்தியானந்தம், போலீசார் சுரேஷ், பாபு ஆகியோர் வேலுார் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., ராஜேஸ் கண்ணன் உத்தரவிட்டார்.

images 77 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories