உ.பி.முதல்வராக யோகி ஆதித்தியநாத் இரண்டாவது முறையாக பதவியேற்பு..

Published:

உ. பி மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடந்த விழாவில் இன்று பதவியேற்று கொண்டார். அவருடன், 2 துணை முதல்வர்கள், அமைச்சர்கள் பதவியேற்றனர். விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உ.பி., சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்த லில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்துள்ளது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி 273 தொகுதிகளை கைப்பற்றியது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, பா.ஜ., மேலிடம் யோகி ஆதித்யநாத்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இதை தொடர்ந்து நேற்று, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் நடந்த விழாவில் இரண்டாவது முறையாக முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து கேசவ பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதாக் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றனர்.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

பின்னர் சுரேஷ்குமார் கண்ணா,
சூர்யா பிரதாப் ஷாஹி,சுவந்திர தேவ் சிங்,பேபி ராணி மவுரியா,
சவுத்ரி லஷ்மி நாராயணன்,ஜெய்வீர் சிங்,
தரம்பால் சிங்,நந்தகோபால் குப்தா
பூபேந்திர சிங் சவுத்ரி,அனில் ராஜ்பர்,ஜிதின் பிரசாதா,
ராகேஷ் ஷச்சான்,அரவிந்த் குமார் ஷர்மா,யோகேந்திர உபாத்யாய்
ஆஷிஷ் படேல்,சஞ்சய் நிஷாத் ஆகியோர் அமைச்சர்களாகவும்
நிதின் அகர்வால்,அனில் அகர்வால்
சந்தீப் சிங்,ரவிந்திர ஜெயிஸ்வால்
குலாப் தேவி,கிரிஷ் யாதவ்
தரம்வீர் பிரஜாபதி,அசிம் அருண்
ஜேபிஎஸ் ரத்தோர்,தயாசங்கர் சிங்
நரேந்திர கஷ்யப்,அருண்குமார் சக்சேனா உள்ளிட்டோர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்

  இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அனுராக் சிங் தாகூர், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பா.ஜ., தலைவர் நட்டா, குஜராத், ஹரியானா, உத்தர்கண்ட் கோவா மாநில முதல்வர்கள் மற்றும் பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.யோகி ஆதித்தியநாத் பதவியேற்பு விழா நடைபெற்ற ஸ்டேடியத்தில் சுமார் 50,000 பேர் அமர்ந்து இருந்தனர். மாநிலம் முழுவதும் இருந்து பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக விழாவில் பங்கேற்றனர். இந்த மைதானத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி உட்பட 60 தொழிலதிபர்களுக்கும் பாலிவுட் முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
16482073032949 - 2026
781419 - 2026

Related articles

Recent articles

spot_img