இரு ஆண்டுகளுக்குப்பின் ஊட்டி மலர் கண்காட்சி ஏற்பாடு தீவிரம்.

உலகப்புகழ் பெற்ற ஊட்டி மலர்கண்காட்சி இரு ஆண்டுகளுக்குப்பின் 124-வது மலர் கண்காட்சியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

images 2022 03 26T114750.839 - 2026
images 2022 03 26T114742.274 - 2026

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். அவர்களை மகிழ்விக்க தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கோடை சீசன் மற்றும் கண்காட்சிகள் நடைபெறவில்லை. தற்போது தொற்று பரவல் மிகவும் குறைந்து உள்ளது. நடப்பாண்டில் கோடை சீசனை முன்னிட்டு மலர் மற்றும் பழக்காட்சி குழு கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழக தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி தலைமை தாங்கினார். கலெக்டர் எஸ்.பி.அம்ரித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மே மாதம் வார விடுமுறை நாட்களில் கண்காட்சிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனை நடத்துவதற்கான தேதிகள், காட்சி ஏற்பாடுகள் மற்றும் வரவு, செலவு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றி செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் எஸ்.பி.அம்ரித் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நீலகிரியில் கடந்த 2 ஆண்டுகள் கோடை சீசன் நடைபெறவில்லை. நடப் பாண்டில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கோடை விழா, கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிகவும் பிரபலமான 124-வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அதன் படி கோத்தகிரி நேரு பூங்காவில் மே 7, 8-ந் தேதிகளில் 11-வது காய்கறி கண்காட்சி, கூடலூரில் மே 13, 14, 15-ந் தேதிகளில் 9-வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் 14, 15-ந் தேதிகளில் 17-வது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 28, 29-ந் தேதிகளில் 62-வது பழ கண்காட்சி நடைபெறுகிறது.

நடப்பாண்டில் மிகச் சிறப்பாக கண்காட்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories