images 47 2 - 2026

தமிழக முதல்வரின் துபாய் பயணம் ..எடப்பாடி பழனிச்சாமி பேட்டி-

சற்றுமுன்

தமிழக முதல்வரின் துபாய் பயணம் குடும்ப பயணமோ அல்லது அவர்களது முதலீட்டு பயணமா என பொதுமக்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது. என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அதிமுக சேலம் புறநகர் மாவட்ட உட்கட்சி தேர்தலை கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி துவக்கி வைத்தபின் அவர் கூறியதாவது,

தமிழக முதல்வரின் துபாய் பயணம் குடும்ப பயணமோ அல்லது அவர்களது முதலீட்டு பயணமா என பொதுமக்கள் இடையே சந்தேகம் எழுந்துள்ளது. துபாய் சர்வதேச கண்காட்சி முடியும் நேரத்தில் தமிழக அரங்கு திறக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் நான் வெளிநாடு பயணம் செல்லும்போது துறை அமைச்சர் செயலர் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால், விலைவாசிதான் ஏறி உள்ளது

விருதுநகர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது. அதிமுக உட்கட்சி தேர்தல் முடிந்த பின்பு ஆளுங்கட்சியை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.

மேகதாது அணை குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அமுல்படுத்த வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து நடக்க வேண்டும். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணை நடக்கிறது. அது குறித்து தனிப்பட்ட முறையில் தனிப்பட்ட கருத்தை கூறக்கூடாது.

அ.தி.மு.க.,வில் சசிகலாவை மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை. சசிகலா பற்றிய ஓ.பி.எஸ். கருத்து தனிப்பட்டது. தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சசிகலா விவகாரத்தில் அரசியல் ரீதியாகவும், பொதுப்பிரச்னையில் தான் வேறுபாடு உள்ளது. சசிகலா குறித்து ஊடகங்களில் தான் கேள்வி கேட்கப்படுகிறது. ஏற்கனவே முடிக்கப்பட்டது. திரும்ப, திரும்ப கேட்க வேண்டாம் என்றார்.

images 47 2 - 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 14 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.