மத்திய அரசுக்கு எதிராக 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் போக்குவரத்து பாதிப்பு…

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் பல்வேறு இடங்களில் காலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. 

இந்த போராட்டம் கரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழக – கேரள எல்லை பகுதிகளில் இரு மாநில பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

தமிழக – கேரள எல்லையான வாளையார் களியக்காவிளை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மதுரை, கோவை சேலம் விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  பேருந்து நிலையங்களில் பெருமளவில் பயணிகள் காத்து கிடக்கும் நிலை காணப்பட்டது.

சென்னையில் பேருந்துகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர
கோயம்பேடு பேருந்து நிலையம், பாரிமுனை, அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூரில் 90 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை.  

பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் முன் வராததால், பணிமனைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதால் அதில் பொதுமக்கள்  கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் குறைந்த அளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

மதுரையில் தினமும்  900 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தொழிற்சங்கங்களின் போராட்டத்தையொட்டி இன்று 400 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
பேருந்து சேவை பாதிப்பால் காலையில்  பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 1425 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று 95 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன.அதே சமயம் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் பஸ்நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஆட்டோக்கள் 90 சதவீதம் ஓடவில்லை. பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட்டன.மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்டத்தில் 13 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

images 2022 03 26T153704.615 1 - 2026
IMG 20220328 WA0049 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories