இந்தியாவில் கொரோனா அலை குறைந்ததையடுத்து வரும், 31ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே இரண்டடுக்கு உதய் எக்ஸ்பிரஸ்
ரயில் இயக்கப்பட உள்ளது.
கடந்த, 2018 ஜூன் 8ம் தேதி கோவை – பெங்களூரு இடையே டபுள்டெக்கர் இரண்டடுக்கு உதய் எக்ஸ்பிரஸ்’
ரயில் சேவை துவங்கியது.
உதய் எக்ஸ்பிரஸ்’ எனப்பட்ட இந்த ரயிலில் எடை குறைந்த, பாதுகாப்பான எல்.எச்.பி., பெட்டி, ஏ.சி., சொகுசு இருக்கைகள், உணவருந்த டைனிங் பகுதி, கண்கவரும் உட்புற அமைப்பு, எல்.சி.டி., திரை, ரயிலின் வேகம், எஞ்சிய துாரம் உள்ளிட்ட விவரங்களை ஜி.பி.எஸ்.,(புவியிடம் காட்டி) உதவியுடன் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது.
பயணிகளை கவர்ந்த இந்த ரயில் சேவை கொரோனாவால் இரண்டு ஆண்டாக நிறுத்தப்பட்டது. வரும், 31ம் தேதி முதல், 14 பெட்டிகளுடன் இந்த ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து காலை, 5:45 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஸ்டேஷன்களில் நின்று மதியம், 12:40க்கு பெங்களூரு அடையும்.
மறுமார்க்கமாக மதியம், 2:15க்கு புறப்படும் ரயில் இரவு, 9:00க்கு கோவை வந்து சேரும். புதன் தவிர, வாரத்தின் ஆறு நாட்கள் ரயில் இயங்கும் என, சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





