திருச்செந்தூரில் இன்றும் இரண்டாவது நாளாக கடல் உள்வாங்கியதால் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் முன்பு அல்லது பின்பு ஓரிரு நாட்கள் கடல் உள்வாங்குவதும் வெளிவருவதும் இயல்பாகும்
கடந்த வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை பகல் வரை அமாவாசை இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்தது. சிறிது நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது.
தொடர்ந்து 2-வது நாளாக இன்று காலையிலும் கடல் கோவிலில் இருந்து அய்யா கோவில் கடற்கரை வரை சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. இதனால் கடற்கரை பாறைகள் வெளியே தெரிகிறது.இதனால் திருச்செந்தூரில் கடற்கரை பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
