படிப்பும் வேண்டும்.. மடியில் உறங்கும் தங்கையுடன் மணிப்பூர் சிறுமி! வைரல்!

manising - 2026

மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அமைந்திருக்கும் பள்ளியில், தனது சகோதரியை மடியில் வைத்துக் கொண்டு பாடங்களை கவனித்து எழுதிக் கொண்டிருக்கும் சிறுமியின் புகைப்படம் பார்ப்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

ஒரு சிலரால் மட்டுமே இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு கண்கலங்காமல் இருக்க முடியும் என்று சிலர் கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.

மணிங்சிலு பாமேய், 11 வயதாகும் அந்தச் சிறுமி தனது வகுப்பறையில், சகோதரியை மடியில் கிடத்திக் கொண்டு பாடங்களை கவனித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

விவசாய நிலத்தில் வேலை செய்ய தங்களது பெற்றோர் சென்றுவிட, பிறந்து சில மாதங்களான தனது சகோதரியை பார்த்துக் கொள்ளும் பொறுப்புடன், படிக்க வேண்டும் என்ற உந்துதலும் போட்டி போட இறுதியில் வென்றது இரண்டுமே.

பொறுப்பையும், கல்வி மீதான ஆர்வத்தையும் ஒருசேர கவனிப்பது என்று முடிவெடுத்தார் இந்தச் சிறுமி.

தனது சகோதரியை மடியில் கிடத்திக் கொண்டு, தனது வீட்டருகே இருக்கும் பள்ளியில் பாடம் பயின்று வருகிறார். இவருக்கு இந்த பச்சிளம் குழந்தையுடன் சேர்த்து நான்கு சகோதர சகோதரிகள் உள்ளனர்.

இந்தச் சிறுமி குறித்த தகவல்களை பார்த்த பல தரப்பினரும், சிறுமியின் கிராமத்துக்கு ஓடிச் சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், குழந்தைகளுக்கான சேவைக் குழுவினரை அந்தக் கிராமத்துக்கு அனுப்பி, சிறுமியின் குடும்பத்துக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூர் அமைச்சர் ஒருவர், இந்தச் சிறுமியின் கல்விச் செலவு முழுமையையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.

தற்போதைய மாணவ, மாணவிகளுக்கும், சிறார்களுக்கும் இந்தச் சிறுமி ஒரு சிறந்த உதாரணமாக உள்ளார். ஏழ்மையோ வாய்ப்பு மறுப்போ கல்விக்கு எப்போதும் ஒரு தடையாக இருக்காது என்று பலரும் மணிங்சிலுவை மனதாரப் பாராட்டி வருகிறார்கள்.

ஆன்லைன் கல்வி முறையால் சரியாக படிக்காத மாணவ, மாணவிகள் நிச்சயம் இந்தச் சிறுமியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories