பார்வையற்றவர்களுக்காக ஷூ.. மாணவன் கண்டுபிடிப்பு!

Published:

Shoe - 2026

அசாமில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் அன்குரித் கர்மாகர், பார்வை குறைபாடு கொண்டவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி சாலைகளில் நடந்த செல்ல உதவும் ஸ்மார்ட் ஷுவை ( காலணிகளை) வடிவமைத்துள்ளார்.

குறிப்பாக பார்வை குறைபாடு உடையவர் இந்த ஸ்மார்ட் ஷுவை அணிந்து செல்லும் போது, எதிர்வரும் தடைகளை ஷுவில் பொருத்தி உள்ள சென்சார் கண்டறிந்து அதிக சத்தத்துடன் அந்த நபருக்கு சமிக்கை செய்யும் என்று அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.

Ankurith Karmakar - 2026

வழக்கமான லெதர் ஷுவில் அன்குரித் சில சென்சார்கள் மற்றும் பேட்டரிகள் அடங்கிய சில தொழில்நுட்பத்தை பொருத்தி இருக்கிறார். குறிப்பாக இதில் உள்ள சென்சார்கள் தடைகளை கண்டறிந்தவுடன் ஷுவில் இருந்து எச்சரிக்கை ஓசை கேட்கும் என்று கூறப்படுகிறது.

இதை வைத்து எதிரே தடை இருக்கிறது கவனமாக செல்ல வேண்டும் என்பதை பார்வை குறைபாடு உடையவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

தற்போது 9ஆம் வகுப்பு படிக்கும் அன்குரித் வருங்காலத்தில் சிறந்த விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என ஆசை கொண்டுள்ளான்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

அதே சமயம் மக்களுக்கு உதவும் வகையில் பல தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் அன்குரித்.

அதேபோல் சமீபத்தில் இக்ஸிகோ (ixigo)என்ற நிறுவனம் ஸ்மார்ட் ஷூக்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் ஷூக்கள் கேமரா, சார்ஜிங் போர்ட், லொகேஷன் டிராக்கர் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் வருகின்றன.

Shoe 1 - 2026

Ixigo குழுமத்தின் தலைமை செயல் அலுவலரும், நிறுவனருமான அலோக் பாஜ்பாய் ட்விட்டரில் இந்த புதிய தயாரிப்பு குறித்த தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதன்படி இக்ஸிகோ நிறுவனம் இந்த புதுவகை ஸ்மார்ட் ஷூக்களை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் ட்விட்டர் பகத்தில் வெளியிடப்பட்ட ஒரு டீஸர் இந்த ஸ்மார்ட் ஷூக்களின் அம்சங்களை விளக்குகிறது. இதுபோன்ற ஸ்மார்ட் ஷூக்கள் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை,

இந்த அசத்தலான ShoesX நீர்ப்புகா யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே இந்த யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியும். அதேபோல் இதற்கான பேட்டரி கீழ் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
Screenshot 2022 0406 102156 - 2026

குறிப்பாக இந்த ஷூக்களின் மிகவும் சிறப்பான அம்சம் என்னவென்றால், இதன் உதவியுடன் செல்பீ எடுக்க முடியம். குறிப்பாக ஷூஸ்எக்ஸ்(ShoesX)ஆனது 12எம்பி செல்பீ கேமராவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இதன் மூலம் செல்பீ எடுப்பது தனி அனுபவம் கொடுக்கும் என்றே கூறலாம். இந்த ஸ்மார்ட் ஷூக்களில் செல்பீ கேமராவைத் தவிர அல்ட்ரா வைட் பின்பக்க கேமரா வசதியும் உள்ளது.

Ankurith Karmakar1 - 2026

இதன் மூலம் வழியில் உங்கள் பின்னால் யார் இருக்கிறார்கள், யார் துரத்துகிறார்கள் என்பதை எளிமையாக அறிந்து கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட் ஷூக்களில் ஆண்டி-தெஃப்ட் சென்சார்கள் இருப்பதால், வெளியிடங்களில் காலணிகளை போட்டு விட்டு பயம் இல்லாமல் சென்று வரலாம். குறிப்பாக காலணிகளை யார் தொடுகிறார்கள் அல்லது யார் திருடுகிறார்கள் என்பதையும் இது உங்களுக்கு எளிமையாக தெரியப்படுத்தும்.

மேலும் இந்த தகவலை உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செயலியுடன் தெரிந்துகொள்ள முடியும். குறிப்பாக ShoesX ஷூவில் Auto Warmer Sole அம்சம் உள்ளது.

இது உங்கள் கால்களை 20 டிகிரி குளிரிலும் கூட சூடாக வைத்திருக்கும். அதேபோல் இந்த ஷூவில் QR Code Scanner வசதியும் இருக்கிறது, இதன் உதவியுடன் உங்களால் எளிமையாக பணம் செலுத்த முடியும்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

இதுதவிர பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ஷூக்கள். விரைவில் ஷூஸ்எக்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதை வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img