images 2022 04 06T110800.861 - 2026

உங்க ஊர் ரேஷன் கடையில் அத்துமீறலா?

சற்றுமுன்

தமிழகத்தில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.


அவரது அறிக்கைக்கையில் கூறியுள்ளதாவது,விருதுநகர் மாவட்டம், முகவூர் கூட்டுறவு வேளாண் கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் தங்கதுரை, பாலியல் தொந்தரவு செய்வதாகவும், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வந்தன. புகார்கள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், மார்ச் 30ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கூட்டுறவு ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலில் ஈடுபடுதல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் 98840 00845 என்ற, ‘வாட்ஸ் ஆப்’ எண்ணில் புகார் அளிக்கலாம்.எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை பணியாளர்களும், எந்தவித நிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல், அச்சமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுங்கள்.இவ்வாறு பெரியசாமி தெரிவித்துள்ளார்.

images 2022 04 06T110800.861 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.