Screenshot 20220406 171411 - 2026

146 அடியில் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முத்துமலை முருகன் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம்…

சற்றுமுன்

146 அடியில் கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ம
உலகில் உயரமான முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட முத்துமலை முருகன் கோவிலில், இன்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த தொழிலதிபர் முத்துநடராஜன் இவர் 2015ல் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே 60 ஏக்கர் நிலம் வாங்கி, 500க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளை அமைத்து விற்பனை செய்தார். அதே இடத்தில், 2 ஏக்கரில், உலகில் இதுவரை உயரமான பத்துமலை முருகன் உயரம் 140 அடி சிலையை போன்று வடிவமைக்க முடிவு செய்தார். அதற்காக, மலேசியாவில் முருகன் சிலை வடிவமைத்த, திருவாரூரை சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன் என்பவரை அழைத்து வந்து உலகில் உயரமான முருகன் சிலையை 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட முடிவு செய்து 2016 செப் 6ல் பூமி பூஜை போட்டு பணியை தொடங்கினார்.

2018ல் முத்துநடராஜன் உடல் நலக்குறைவால் இறந்தபோதும், அவரது மகன்கள் ஸ்ரீதர் வசந்தராஜன்,ஞானவேல், மகள் பத்மாவதி உள்ளிட்ட குடும்பத்தினர், முருகன் சிலை அமைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இந்நிலையில், இன்று காலை, 10:30 மணிக்கு, 146 அடி உயர முத்துமலை முருகன் சுவாமி, மஹா கணபதி உள்ளிட்ட அறுபடை முருகன் ஆகிய சன்னதிகளில், மஹா கும்பாபிஷேகம் நடந்தது. உயரமான முருகன் சிலைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஆசி பெற்றனர்.

Screenshot 20220406 171411 - 2026
gallerye 121005431 3001305 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.