நீட் தேர்வு நேரம் அதிகரிப்பு..கட்டணமும் உயர்வு..

நீட் நுழைவுத்தேர்வு
கடந்த ஆண்டு 3 மணி நேரம் மட்டுமே நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேசிய தேர்வு முகமை
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான கட்டணத்தையும் அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது .

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வு வருகிற ஜூலை 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நடந்தது வருகிறது.

தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் (neet.nta.nic.in) சென்று மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். நாடு முழுவதும் தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

மாணவர் கள் ஆன்லைனில் பதிவு செய்யும்போது மொழியையும் தேர்வு செய்ய வேண்டும். நீட் தேர்வுகள் ஓ.எம்.ஆர். தாள்கள் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நீட்தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும் என்று தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 நிமிடங்களாக 3 மணிநேரம் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 3 மணி நேரம் மட்டுமே தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வுக்கான கட்டணத்தை தேசிய தேர்வு முகமை
அதிகரித்து உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் எனப்படும் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்தாண்டு நடைபெற உள்ள தேர்விற்கான கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து பிரிவினரும் கடந்த ஆண்டை காட்டிலும் ரூ.100 -ஐ அதிகமாக கட்ட வேண்டும். பொது பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.1,600 ஆகவும், இ.டபிள்யூ.எஸ், மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான கட்டணம் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,500 ஆகவும், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், மூன்றாம் பாலினத்தவருக்கான கட்டணம் ரூ.800- ல் இருந்து 900 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைத்து பிரிவினருக்குமான கட்டணமாக ரூ.8,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன்வழி கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட கட்டணங்களை தேர்வர்கள் தனியே செலுத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

images 11 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories