தமிழகத்தில் காலாவதியான அரசு பள்ளி கட்டிடங்களை இடித்து புதிதாக கட்ட நடவடிக்கை…

தமிழகத்தில் காலாவதியாகி சேதமான இடிக்கப்படாத பள்ளிக் கட்டிடங்களில் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த கட்டிடங்களை இடிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

images 28 - 2026

தமிழகத்தில் மொத்தமுள்ள 9 ஆயிரத்து 573 பள்ளிகளில் 13 ஆயிரத்து 36 பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 6,218 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில் 27 லட்சத்து 24 ஆயிரத்து 206 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் தொடக்க கல்வித் துறையின் கீழ் 31 ஆயிரத்து 336 அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 25 லட்சத்து 50 ஆயிரத்து 997 மாணவர்கள் படிக்கிறார்கள்.

இந்த அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. பருவமழையின் போது பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து அந்த கட்டிடங்களை இடிப்பதற்கு பொதுப் பணித்துறை, உள்ளாட்சித் துறையிடம் பட்டியலை அளிக்கும்.

திருநெல்வேலியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி கழிப்பறைகள் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுவரை 3 ஆயிரத்து 482 பள்ளிகளில் 4 ஆயிரத்து 808 பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 6 ஆயிரத்து 33 பள்ளிகளில் பழுதடைந்துள்ள 8 ஆயிரத்து 228 கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளன. ஒட்டுமொத்தமாக 9 ஆயிரத்து 573 பள்ளிகளில் 13 ஆயிரத்து 36 பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories