2 ஆயிரம் பேருக்கு வழங்கப்படாத சம்பளம்! ஆசிரியர்கள் குமுறல்!

teacher - 2026

தமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பணிநிரவல் செய்யப்பட்ட 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் சம்பளம் வழங்கப்படவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை ஜன., முதல் – மார்ச் வரை கல்வித்துறை நடத்தியது.

மார்ச் 14ல் அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இரண்டாயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேவை உள்ள வெவ்வேறு பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனர்.

இந்தஆசிரியர்களின் முழு விவரம் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., (ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை)ல் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் மார்ச் சம்பளம் கிடைக்காமல் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:
பணிநிரவல் செய்யப்பட்டு 20 நாட்களுக்கும்மேல் ஆன நிலையிலும் விவரம் பதிவேற்றம் செய்வதில் இடர்பாடு உள்ளது என்பது ஆச்சரியமாக உள்ளது.

விப்ரோ நிறுவனம் தான் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்.,ஐ பராமரிக்கிறது. அடிக்கடி ஏற்படும் ‘சாப்ட்வேர்’ பிரச்னையால் ஒவ்வொரு மாதமும் விவரம் பதிவேற்றுவதில் அரசு அலுவலர்களுக்கு பெரும் சவாலாக உள்ளதால் ஏற்கெனவே மனஉளைச்சலில் உள்ளனர்.

தற்போது 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளமே கிடைக்கவில்லை என்பது அதிர்ச்சியாக உள்ளது. இடர்பாடுகளை சரிசெய்து சம்பளம் வழங்க அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories