ராம நவமி சிறப்பு கட்டுரை-மங்களூரு அருகே கன்யாடி நகரத்தில் பிரபலமான ஸ்ரீராமஷேத்ரா

Published:

கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகிலுள்ள தர்மஸ்தலா புகழ்பெற்ற ஆன்மிக நகரத்தில்  இருந்து 4 கி.மீ. தூரத்தில் உள்ள கன்யாடி நகரத்தில், ஸ்ரீராமஷேத்ரா என்ற மிக அழகிய கோயில் ஸ்ரீராமருக்காக கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீஆத்மானந்த சரஸ்வதி என்பவர் 1978-ல் இக்கோவிலைக் கட்டியுள்ளார். மூன்று அடுக்குகள் கொண்ட இக்கோவில் வட இந்திய பாணியில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமர், சீதாதேவியை தரிசிக்கலாம். இக் கோவிலில் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படும்   ராம நவமி விழா விமரிசையாக தற்போது நடந்து வருகிறது. 188 அடி உயரமுள்ள வெள்ளித்தேரில் ராம நவமி இன்று ஏப்ரல் 10 இல் ஸ்ரீராமர் இங்கு பவனி வருகிறார்.இதை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

மங்களூரிலிருந்து 74 கி.மீ,  தர்மஸ்தலாவிலிருந்து 3 1/2 கி.மி தூரத்தில் கன்யாடியில்  ஸ்ரீ ராம க்ஷேத்ரா என்று அழைக்கப்படும் இந்த   ஸ்ரீராமர் கோவில்  உள்ளது. 

பட்டாபிஷேகக் காட்சியில்  ராமர்  அழகாய் கொலுவீற்று இருக்கும் கோவில்.இருபக்கமும் இது போல் யானை  உள்ளது போல்மண்டபம் இருக்கிறது. அடிக்கடி மழை பொழிவதால் படிகளுக்கும் மேல் கூரை அமைத்து இருக்கிறார்கள்.
இராமாயணக் காட்சிகள்  சித்தரிக்கப்பட்ட அழகான முகப்பு மண்டபம் இதோடு அழகுக்கு வளர்க்கப்படும் புற்கள் என்று  அழகாய் ஒரு தோட்டம் நடுவில்  இருக்கிறது .இந்த மண்டபத்திற்குள்  மனிதத் தலையுடன் பாம்பு நடுவில் இருக்கிறது,  சிலைக்கு இரு பக்கமும் ஐந்துதலைகளுடன்  நாகம் இருக்கிறது.
கீழ்த் தளம், அப்புறம் மேலே இரண்டு மாடியில் மிக அழகாய் அமைந்த கோவில் இதுவாகும்.முதல் தளத்தில்  பெரிய தூண்களை உடைய அழகிய பஜனை மண்டபம் உள்ளது .
சலவைக் கல்லால் ஆன  கோபுரம். கோவில் உள்ளே எல்லா உருவச்சிலைகளும் சலவைக்கல்லால் செய்யப்பட்டது. மிக அழகாய் ஆடை அணிகலன்கள் , மலர் மாலைகளுடன் கண்கவர் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார்கள். நவக்கிரகங்கள்  தனித்தனியான மண்டபங்களில் உள்ளன.
கோவிலில் நவக்கிரகங்களுக்குப் பின்புற மண்டபம் , யாக சாலை உள்ளது.நவக்கிரகங்கள், அவரவர்களுக்கு உரிய வாகனங்களில் இருக்கிறார்கள். நவக்கிரகங்கள் சிலைகள் கல்லில் வடிக்கப்பட்டு இருக்கிறது. ராமருக்கும், அனுமனுக்கும் தனித்தனியாக மரத்தேர்கள் உள்ளன.  188 உயர வெள்ளித்  தேர் இருக்கிறது.அனுமன், நவதுர்க்கா இருக்கிறார்கள். இன்று இக்கோயிலில் நாள் முழுவதும் ராம  நவமி சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. .

sriram3 - 2026
images 26 - 2026
images 27 1 - 2026
shree rama temple - 2026
ஆன்மீக பயணம் ஒன்று 111 - 2026
ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Related articles

Recent articles

spot_img