ராமநவமியில் ராமர் ஸ்லோகத்திற்கு நடனமாடும் மகள்.. வீடியோ பதிவிட்டு மகேஷ்பாபு பெருமிதம்!

mahesh babu 1 - 2026

டோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு தனது மகளின் குச்சிப்புடி நடன வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்து பூரித்துப் போயுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. கடந்த 2005ம் ஆண்டு நம்ரதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மகேஷ் பாபுவுக்கு சித்தாரா மற்றும் கெளதம் என இரு குழந்தைகள் உள்ளனர்.

டோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும் சவுத் இந்தியன் பிரின்ஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் மகேஷ் பாபு.

தெலுங்கில் அதிக அளவு ரசிகர் படை வைத்திருக்கும் நடிகர்களில் முன்னணியில் உள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து மகேஷ் பாபு நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே மாதம் 12ம் தேதி வெளியாகிறது.

நடிகர் மகேஷ் பாபுவின் மகள் சித்தாராவுக்கு தற்போது 9 வயதாகிறது. அப்பாவை போலவே செம க்யூட்டாக அழகாக இருக்கிறார் சித்தாரா.

chithara - 2026

தளபதி 66 படத்தில் விஜய்க்கு மகளாக சித்தாரா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்லு அர்ஜுனின் மகள் சமந்தாவின் படத்தில் அறிமுகமாகவுள்ள நிலையில், மகேஷ் பாபுவின் மகளும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு பரதநாட்டியம், கேரளாவிற்கு கதகளி என பாரம்பரிய நடனங்கள் உள்ள நிலையில், ஆந்திராவிற்கான பாரம்பரிய நடனமான குச்சிப்புடி நடனத்தை கற்று சூப்பராக நடனம் ஆடி உள்ளார் சித்தாரா.

மகள் அழகாக நடனமாடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து பூரித்துப் போயுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

தனது ட்விட்டர் பக்கத்தில் மகள் குச்சிப்புடி ஆடும் வீடியோவை ஷேர் செய்த நடிகர் மகேஷ் பாபு, மேலும், சில ட்வீட்களை போட்டு ராம நவமி அதுவுமாக ராம ஸ்லோகம் அடங்கிய நடனத்தை சித்தாரா ஆடுவதை பார்த்து ஒரு தந்தையாக ரொம்பவே பெருமைப் படுகிறேன் என நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

சர்காரு வாரி பாட்டா படத்தை முடித்த கையோடு நடிகர் மகேஷ் பாபு இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மகேஷ் பாபுவுக்காக காடுகளில் நடக்கும் சாகசங்கள் நிறைந்த ஒரு கதையையும் இன்னொரு வரலாற்று கதையையும் இயக்குநர் ராஜமெளலி கூறியுள்ளதாகவும் விரைவில் எந்த கதையை மகேஷ் பாபு முடிவு செய்கிறாரோ, அந்த கதையை படமாக்கப் போகிறாராம் ராஜமெளலி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories