பீகாரில் 500 டன் இரும்பு பாலத்தை திருடிய 8 பேர் கைது..

பீகாரில் 60 அடி நீளமுள்ள 500 டன் எடை கொண்ட
இரும்பு பாலத்தை  கடந்த சில தினங்களுக்கு முன்னர்,  சட்ட விரோதமாக தகர்த்த வழக்கில் இரண்டு அரசு அதிகாரிகள்(ஒரு துணைப் பிரிவு அதிகாரி மற்றும் ஒரு வானிலை துறை அதிகாரி) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் ஆமியாவார் கிராமத்தில் 50 ஆண்டு பழமையான 60 அடி நீள இரும்பு பாலம் உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பாலத்தை சிலர் ஜே.சி.பி எந்திரம், கியாஸ் கட்டர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வெட்டி எடுத்து அலேக்காக கொண்டு சென்று விட்டனர். திடீரென பாலம் காணாமல் போனதை கண்ட கிராமமக்கள் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அதிகாரிகள் என சொல்லி ஒரு கும்பல் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்தகும்பலை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

விசாரணையில் இந்த திருட்டு பட்டப்பகலில் தான் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. நீர்ப்பாசனத் துறையுடன் இணைந்து பணியாற்றும் அரசு அதிகாரிகள் போல் காட்டிக் கொண்ட கொள்ளையர்கள் சிலர், கைவிடப்பட்ட பாலத்தை உடைக்க எரிவாயு கட்டர் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இரண்டு நாட்கள் தொடர்ந்து ‘உழைத்து’ பாலத்தை அகற்றியுள்ளனர். பாலத்தை அகற்ற கிராம மக்கள் நீர்ப்பாசனத்துறையிடம் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளதால் அதிகாரிகள் உண்மையிலேயே வந்து அகற்றுவதாக நினைத்து விட்டதாக பொதுமக்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த திருட்டு சம்பவத்தில் வானிலைத் துறை அதிகாரி அரவிந்த் குமார், எரிவாயு கட்டர்கள் மற்றும் பிற உபகரணங்களுடன் ஆயுதம் ஏந்திய குழுவை வழிநடத்தியுள்ளார். இந்த குழுவினர் சில நாட்களுக்கு முன்பு பாலத்தை அகற்றினர்.

வெறும் 3 நாட்களில் பாலம் முழுவதும் துண்டிக்கப்பட்டு காணாமல் போனது.அந்த  ஸ்டீல் கட்டமைப்பு பாலம் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால், யாரும் புகார் தெரிவிக்கவில்லை.

அந்த மாவட்டத்தின் துணை வட்ட அதிகாரியான ராதே ஷியாம் சிங், இந்த திருட்டு சம்பவத்தில் மூளையாக இருந்துள்ளார். ராதே ஷியாம் சிங், மேலும் ஆறு கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து ஒரு ஜேசிபி, திருடப்பட்ட 247 கிலோ எடையுள்ள இரும்பு சேனல்கள் மற்றும் பிற பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். ஜேசிபி இயந்திரம் மற்றும் பிக்-அப் வேன், சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட கேஸ் கட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்

தற்போது இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக நீர்வளத் துறையின் துணைப் பிரிவு அதிகாரி (எஸ்டிஓ) உட்பட எட்டு பேரை பீகார் காவல்துறை கைது செய்துள்ளதாக காவல்துறை கண்காளிப்பாளர் ஆஷிஷ் பார்தி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு ஜேசிபி, திருடப்பட்ட 247 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகள் மற்றும் பிற பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர்.

202204111047470057 Bihar government official among 8 held for stealing 60feet SECVPF - 2026
786733 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories