மதுரை மீனாட்சி அம்மனுக்கு நடந்த பட்டாபிஷேகம் …

Published:

மாமதுரையில் தேவர்கள் ஆசியுடன் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நடைபெறும் சித்திரை பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செவ்வாய்கிழமை இரவு கோலாகோலமாக நடந்தது.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்5ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருகின்றனர். மதுரையை எட்டு மாதங்கள் சுவாமி ஆட்சி செய்வார். அதற்காக ஆவணியில் அவருக்கு பட்டாபிஷேகம் நடக்கும். அம்மன் நான்கு மாதங்கள் ஆட்சி செய்வார். அதற்காக சித்திரை திருவிழாவில் திருக்கல்யாண விழாவுக்கு முன்னோடியாக பட்டாபிஷேகம் நடைபெறும்.செவ்வாய் இரவு பாரம்பரிய முறைப்படி அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில்
ஹம்பி நகரத்து மன்னர் ராயர் வழங்கிய ரத்தின ஆபரணங்கள் கொண்ட ராயர் கிரீடம் அம்மனுக்கு சாற்றப்பட்டு, பட்டாபிஷேகம் செய்து ரத்தினங்கள் இழைத்த செங்கோல் வழங்கும் பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது.

அம்மனிடம் இருந்து தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோல் பெற்று, சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து மீண்டும் அம்மனிடம் சேர்ப்பித்தார்.
பட்டாபிஷேகத்தை ஏற்ற மீனாட்சி அம்மன் மதுரை ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் என்பதும், சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடைபெறுவதாகவும் பக்தர்களிடையே ஐதீகம் நிலவிவருவது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி அம்மன் பட்டம் சூட்டியதை பறைசாற்றும் விதமாக அம்மன் பிரதிநிதியாக தக்கார் கருமுத்து கண்ணன், அம்மனிடம் இருந்து செங்கோலை பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து செங்கோலை மீண்டும் அம்மனிடம் வழங்கிய பக்தி பூர்வமான. நிகழ்வை
திரளான பக்தர்கள் வந்து பங்கேற்று
பார்த்து அம்மனை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து வெள்ளி சிம்மாசன வாகனத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுவாமி நேற்றிரவு மாசிவீதிகளில் எழுந்தருளினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று அஷ்டதிக்கு பாலர்களை எதிர்த்து வெற்றி பெறும் திக்விஜயம் நடக்கிறது. வியாழக்கிழமை ஏப்14 ல் தமிழ்ப் புத்தாண்டு அன்று காலை 10:35 மணி முதல் 10:59 மணிக்குள் திருக்கல்யாணமும், ஏப்15ல் தேரோட்டமும் நடக்கிறது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!
pattabisegammeenakshi11 1619149166 tile 1649747202 - 2026
images 48 1 - 2026
whatsappimage2022 04 12at12 23 23pm tile 1649747479 - 2026
whatsappimage2022 04 12at12 23 22pm1 tile 1649747488 - 2026

Related articles

Recent articles

spot_img