குஞ்சு பொரிக்கும் கழுகு: வைரல் வீடியோ!

Eagle - 2026

இங்கிலாந்தில் வெள்ளை வால் கொண்ட காட்டு கழுகு குஞ்சு பொரிக்கும் நேரடி காட்சியை ரகசிய கேமரா படம்பிடித்தது.

பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சொசைட்டி (RSPB) அபெர்னாதி மையத்தின் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஏப்ரல் 8, வெள்ளிக்கிழமை இரவு 7.43 மணிக்கு குஞ்சு பொரிக்கும் நேரலை காட்சிகளைப் பார்த்தனர்.

பறவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, கூடு கட்டும் இடம் பொதுமக்களுக்கு தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டது.

சமீபத்தில், RSPB ஸ்காட்லாந்து ஏப்ரல் 8 ஆம் தேதி 19.43 மணிக்கு கழுகுகள் முதல் முட்டை இட்டு குஞ்சு பொரித்ததை உறுதிப்படுத்தியது.

இரண்டு கழுகுகளும் பனி மற்றும் புயலில் இருந்து குஞ்சுகளை பாதுகாக்கும் காட்சிகள் காண கிடைக்காதவை. லோச் கார்டன் நேச்சர் சென்டரில் குஞ்சு பொரிக்கும் நேரடி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

அதை பதிவு செய்த கேமரா, கூட்டில் இருந்து மூன்று மீட்டர் தூரத்தில் ஒரு மர கிளையில் மறைத்து வைக்கப்பட்டது.

இங்கிலாந்தில் இது மாதிரியான வீடியோவை பதிவு செய்வது இதுவே முதல் முறை. முன்னதாக, எஸ்டோனியா மற்றும் லாட்வியாவில் குஞ்சு பொரிப்பது வெற்றிகரமாக ஆவணப்படுத்தப்பட்டது.

ஆர்எஸ்பிபி ஸ்காட்லாந்தின் வருகையாளர் அனுபவ மேலாளர் ஃபெர்கஸ் கம்பெர்லேண்ட் கூறியதை மேற்கோள் காட்டி தி கார்டியன் வெளியிட்டுள்ள செய்தியில்: “கழுகு குஞ்சு பொரிப்பதைப் பார்ப்பது பொதுமக்களுக்கு ஒரு உற்சாகம்.

இந்தப் பறவைகளின் உண்மையான தன்மை மற்றும் ஆளுமையைப் பார்ப்பது மக்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். என் முன்னே இப்படியெல்லாம் நடப்பதை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது’ என அவர் கூறியதாக குறிப்பிட்டுள்ளது.

கம்பர்லேண்ட் இது குறித்து மேலும் கூறுகையில், ‘இது நம்பமுடியாதது. இத்தகைய சிறப்புமிக்க தருணத்தை காண முடிந்ததை நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறோம்.

‘வெள்ளை வால் கொண்ட கழுகு என்பது மிதமான யூரேசியாவில் பரவலாகக் காணப்படும் கடல் கழுகின் மிக முக்கிய இனமாகும்.

இந்த பறவைகள் 1918 ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்தில் அழிந்துவிட்டன. இருப்பினும், ஸ்காண்டிநேவிய கழுகு 1975 ஆம் ஆண்டு ஐல் ஆஃப் ரம்மில் மீண்டும் கண்டிபிடிக்கப்பட்டது’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories