images 52 - 2026

மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து..

சற்றுமுன்

தமிழகத்தில் பிரபலமான வனக்கோயில்களில் ஒன்றான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நாளை முதல் வருகின்ற 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியிருந்தது தற்போது
மழை பெய்து வருவதால் அனுமதி ரத்து என வனத்துறை அறிவிவித்துள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் மாதந்தோறும் பலஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.இக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை,பவுர்ணமி என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இம்மாத பிரதோஷம் மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நாளை14ஆம் தேதி முதல் 17ஆம் வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது இதனால் சங்கிலிப் பாறை தாணிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது .

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

மேலும் நாளை சித்ரா பவுர்ணமி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கியிருந்தனர் தற்போது மழை பெய்து வருவதால் பக்தர்கள் நாளை முதல் 17ஆம் தேதி வரை மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என வனத்துறை தெரிவித்துள்ளது .இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்

images 52 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.