
குஜராத்தில் 108 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலையை காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் 108 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்று (ஏப்.16) ஹனுமன் ஜெயந்தி முன்னிட்டு காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

நாடு முழுவதும் 4 திசைகளில் அமைக்கப்பட்டுள்ள 4 சிலைகளில் இரண்டாவது சிலை இதுவாகும்.
இத்தொடரின் முதல் சிலை வடக்கே சிம்லாவில் 2010ல் அமைக்கப்பட்டது.தெற்கில் ராமேஸ்வரத்தில் சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் மோர்பியில் 108 அடி உயர ஹனுமான் சிலையை ஏப்ரல் 16, 2022 அன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்கிறார்.
On the occasion of Hanuman Jayanti,Prime Minister Narendra Modi will unveil a 108 ft statue of Hanuman ji in Morbi, Gujarat on 16 April. This statue is the second of the 4 statues being set up in 4 directions across the country, as part of #Hanumanji4dham project: PMO
— ANI (@ANI) April 15, 2022
(File pic) pic.twitter.com/iYdX1P0yH9
Today, we mark the special occasion of Hanuman Jayanti. In Morbi, at 11 AM, a 108 feet statue of Hanuman ji will be inaugurated. I am honoured to be getting the opportunity to be a part of this programme via video conferencing. https://t.co/qjvLIHWWiO pic.twitter.com/kbHcIxd90Z
— Narendra Modi (@narendramodi) April 16, 2022




