பூமியை வேகமாக நெருங்கும் வால் நட்சத்திரம்: நாசா!

comet - 2026

இயல்பை விட 50 மடங்கு பெரிய கருப்பகுதியைக் கொண்ட ஒரு வால் நட்சத்திரம் மணிக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

நாசாவின் ஹபிள் தொலைநோக்கி வால் நட்சத்திரத்தின் கருப்பகுதி பனிக்கட்டியின் நிறை சுமார் 500 டிரில்லியன் டன்கள் என்று கண்டறிந்துள்ளது. இது 137 கிலோ மீட்டர் அகலம் கொண்டது.

ஆனால் இது பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் அதிகபட்சமாக சூரியனில் இருந்து ஒரு பில்லியன் மைல் தொலைவுக்குத்தான் அது நெருங்கி வரும். அதுவும் 2031-ஆம் ஆண்டுக்குள் நடக்காது.

இந்த வால நட்சத்திரம் முதன்முதலில் 2010-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இப்போதுதான் ஹபிள் தொலைநோக்கி அதன் அளவை உறுதிப்படுத்தியுள்ளது.

இது இதுவரை வானியலாளர்கள் பார்த்த அனைத்து வால் நட்சத்திரங்களை விடவும் இது மிகப்பெரியது.

“இந்த வால் நட்சத்திரம் பெரியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கருதிவந்தோம். இப்போது அதை உறுதிப்படுத்தி இருக்கிறோம்” என்று லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கோள் அறிவியல் மற்றும் வானியல் பேராசிரியராக இருக்கும் டேவிட் ஜூவிட் கூறினார்.

ALSO READ:  பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

இந்த வால் நட்சத்திரத்தை பெஹிமோத் எனப்படும் ராட்சதப் பனி யானையுடன் நாசா ஒப்பிடுகிறது. பூமியை நோக்கி இது பாய்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறது.

சிலியில் கூட்டு அமெரிக்க ஆய்வகத்தில் கறுப்பு ஆற்றல் பற்றி ஆய்வு செய்து வரும் பெட்ரோ பெர்னார்டினெல்லி, கேரி பெர்ன்ஸ்டீன் ஆகிய விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்தனர் என நாசா விண்வெளி அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

வால் நட்சத்திரங்களை பனிக்கட்டி “லெகோ தொகுப்பு” என்று நாசா கூறுகிறது. இது கோள்கள் கட்டமைக்கப்பட்ட தொடக்க காலத்தில் எஞ்சியிருந்த பகுதிகளாகும்.

“சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள பெரிய கோள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை ஆட்டத்தின்போது சூரிய குடும்பத்தில் இருந்து அவை எதிர்பாராத விதமாகத் தூக்கி வீசப்பட்டன” என்று நாசா கூறுகிறது.

“வீசப்பட்ட வால் நட்சத்திரங்கள் சூரியக் மண்டலத்தைச் சுற்றியுள்ள ஊர்ட் மேகத் திரளில் இருக்கின்றன”. ஊர்ட் என்பது சூரிய மண்டலத்தைச் சுற்றி பனியால் ஆன மேகம் இருப்பதைக் கண்டறிந்த விஞ்ஞானியின் பெயர்.

மக்காவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மேன்-டு ஹுய் இந்த வால் நட்சத்திரத்தை “ஒரு அற்புதமான பொருள்” என்று வியக்கிறார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

“வால் நட்சத்திரம் மிகவும் பெரியதாக இருக்கலாம் என்று நாங்கள் யூகித்தோம். ஆனால் இதை உறுதிப்படுத்த எங்களுக்கு சிறந்த தரவு தேவைப்பட்டது.”

பெர்னார்டினெல்லி-பெர்ன்ஸ்டைன் வால் நட்சத்திரம் முப்பது லட்சம் ஆண்டுகள் நீளமான நீள்வட்ட சுற்றுப்பாதையில் பயணிக்கிறது. இதனால் சூரியனிலிருந்து தோராயமாக அரை ஒளியாண்டு தொலைவு வரை அது செல்லும்.

இப்போது இந்த வால் நட்சத்திரம் சூரியனிடம் இருந்து 200 கோடி மைல்களுக்கும் குறைவான தொலைவில் உள்ளது. இது நமது சூரிய மண்டலத்தின் தளத்துக்கு கிட்டத்தட்ட செங்குத்தாக விழுந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories