தலையில்லா மனிதன்.. அதிர்ச்சியில் ஆழ்த்திய கூகுள் மேப்!

Published:

invisible 1 - 2026

புதிய இடங்கள் மற்றும் பகுதிகளை கண்டறிய கூகுள் மேப் பயன்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் கூகுள் மேப் மூலமாக படம்பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் பகுதியில் அந்த நாட்டின் கடற்படைக்கு சொந்தமான பகுதி அமைந்துள்ளது.

இந்த பகுதியை கூகுள் மேப் மூலமாக படம்பிடித்துள்ளனர். அந்த புகைப்படத்தில் ஹாலிவுட் திரைப்படங்களில் காட்டுவது போல தலை, கால், முகம் என உடலின் எந்த பாகமும் கண்ணுக்கு தெரியாதது போல ஒரு உருவம் நடந்து செல்கிறது. அந்த உருவம் வெள்ளை நிறத்தில் ஒரு ஆடை மட்டும் அணிந்துள்ளது.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.

அமெரிக்காவின் கடற்படை பகுதியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பகுதியில் ஏராளமான விசித்தரமாக ஆள் யாரென்று தெரியாத வகையில் ஒரு உருவம் படத்தில் காட்டுவது போல நடந்து செல்வது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!
invisible - 2026

ஹாலிவுட்டில்தான் உருவம் யாரென்றெ தெரியாத இன்விசிபிள் மனிதர்களை கொண்ட திரைப்படங்கள் காட்டப்படுவது வழக்கம். ஆனால், நிஜத்தில் இதுபோன்ற ஒரு உருவம் வெளியில் நடமாடி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

invisible 2 - 2026

மேலும், இந்த புகைப்படத்தில் உள்ள உருவம் மரத்தில் ஏறுவது போன்ற பல புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் குறித்து வேறு எந்த தகவலும் தற்போது வெளியாகவில்லை. இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டதா? அல்லது உண்மையில் மர்மம் நிறைந்ததா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related articles

Recent articles

spot_img