மயிலாடுதுறையில் கவர்னர் பாதுகாப்பாக சென்ற கான்வாய் மீது கறுப்புக்கொடி மற்றும் கம்புகளை வீச்சு..

மயிலாடுதுறையில் இன்று கவர்னர் ரவிக்கு பாதுகாப்பாக சென்ற கான்வாய் மீது கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி மற்றும் கம்புகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த நிகழ்வை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைக்க இன்று மயிலாடுதுறைக்கு வந்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த கவர்னர் ஆர்என் ரவி திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோ பூஜை கஜ பூஜை செய்து சாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மணப்பந்தல் வழியாக தர்மபுர ஆதீனத்தை வந்தடைந்தார். அப்போது மணமந்தல் என்ற இடத்தில் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சார்பில் அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. அவர்களை கடந்து கவர்னர் சென்று விட்ட நிலையில், பாதுகாப்பாகச் சென்ற வாகனங்கள் மீது கொடிகள் மற்றும் கம்புகள் கொடிகள் மற்றும் கம்புகளை வீசி எறிந்தன. நீட் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமலும் ஜனாதிபதிக்கு அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை தடுப்பதற்கு போலீசார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

தருமபுர ஆதீனத்தை வந்தடைந்த தமிழக கவர்னருக்கு பா.ஜ.க வினர் வரவேற்பளித்தனர். தருமபுரம் ஆதீனம் வாசலில் கவர்னருக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதனை எடுத்து தருமபுர ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை கவர்னர் திறந்து வைத்தார்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் கவர்னர் பங்கேற்று பேசினார்கள். தொடர்ந்து தர்மபுர ஆதீனம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக யாத்திரையை கவர்னர் துவக்கி வைத்தார். கவர்னர் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் மிக அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

samayam tamil 2 - 2026
202204191033461199 Tamil News tamil news Governor RN Ravi Swamy Darshanam in Thirukadaiyur MEDVPF - 2026
202204191006205869 Mayiladuthurai governors black flag protest SECVPF - 2026
police4018 1650341316 - 2026
mayilaaduthurai governor 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories