திருச்சி அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்று, கணவர் தற்கொலை ..

திருச்சி அருகே இன்று குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்று, கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகேயுள்ள அஞ்சலம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் ( 55), விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (50). இந்த தம்பதியினருக்கு பிரசாத் என்ற மகளும், பிரதீபா என்ற மகளும் உள்ளனர்.

மகனுக்கு திருமணமாக அதே ஊரில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார். மகள் அருகிலுள்ள வாளசிராமணி கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். வெங்கட்ராமனும், சரஸ்வதியும் விவசாய தோட்டத்தின் அருகே சிறிய அளவில் ஓட்டு வீடு கட்டி அதில் வசித்து வந்தனர்.

மேலும் வெங்கட்ராமன் தோட்டத்தில் ஏராளமான பசு மாடுகளும் வளர்த்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வழக்கமாக பால் கறப்பதற்காக அதே ஊரைச்சேர்ந்த பால்காரர் ஒருவர் வந்துள்ளார்.

அப்போது வீட்டின் வெளியே சரஸ்வதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்காரர் உடனடியாக இதுபற்றி ஊருக்குள் சென்று கூறினார். இதையடுத்து கிராம மக்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் அதே ஊரில் இருக்கும் மகனும் விரைந்து வந்தார். அவர் தந்தையை தேடிய போது, அவர் அருகிலுள்ள ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

வெங்கட்ராமனுக்கும், சரஸ்வதிக்கும் கடந்த சில மாதங்களாகவே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. அடிக்கடி அவர்கள் சண்டை போட்டுக்கொள்வதும், உறவினர்கள் வந்து அ வர்களை சமாதானம் செய்வதும் வாடிக்கையாக இருந்தது. இடையில் சரஸ்வதியை வெங்கட்ராமன் தாக்கியும் உள்ளார்.

இந்த நிலையில் தான் நேற்று இரவு மீண்டும் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு முற்றியுள்ளது. அதன் பிறகு சரஸ்வதி வீட்டிற்கு வெளியில்படுத்து உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் இருந்த வெங்கட்ராமன், அரிவாளை எடுத்து வந்து மனைவியின் கழுத்தை அறுத்துகொலை செய்துள்ளார். பின்னர் தானும் அருகிலிருந்த மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுபற்றி அங்கிருந்தவர்கள் தா.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே தற்போதுஅஞ்சலம் மேலூர் கிராமத்தில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று சாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் இறந்தவர்களை ஊருக்குள் வைத்திருந்தால் வெளியூரில் இருந்து வரும் உறவினர்கள் தயக்கம் காட்டுவார்கள் என்று கருதினர். எனவே போலீசார் வருவதற்குள் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று எரித்துவிட முடிவு செய்தனர். அதன்படி இருவரின் உடல்களையும் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று விறகு, தென்னை மட்டைகளை அடுக்கி எரிக்க முயன்றுள்ளனர்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

அப்போது அங்கு வந்த போலீசார் வெங்கட்ராமன், சரஸ்வதி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

images 50 3 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories