images 13 - 2026

சசிகலாவிடம் இன்று 4மணிநேரம் போலீசார் விசாரணை..

சற்றுமுன்

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம்  நேற்று 5½ மணி நேரம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று 4மணிநேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று சசிகலாவிடம் விசாரணையை நிறைவு செய்தது தனிப்படை போலீஸ். மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை துருவி துருவி கேள்வி கேட்டு வாக்குமூலம் பெற்றது.

நேற்று 5½ மமணி நேரம் விசாரணை நடந்த நிலையில் இன்று 4 மணி நேரம் தனிப்படை விசாரித்துள்ளது. வழக்கு தொடர்பாக சென்னை தி.நகர் வீட்டில் 2-வது நாளாக மொத்தம் சசிகலாவிடம் 10 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.

images 13 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.