எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சற்றுமுன் சென்னை தமிழகம்

புது தில்லி:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு. இந்த அமைப்பு அண்மையில் பல்வேறு மாநில முதல்வர்களின் பின்னணி குறித்து ஆய்வு நடத்தியது. அதில்தான் இந்த சுவாரஸ்யமான விவரங்கள் தெரியவந்துள்ளன.

நாட்டின் உச்ச பட்ச பணக்கார முதல்வராகவும், அதிக சொத்துகள் கொண்ட முதல்வராகவும் முதலிடத்தில் உள்ளார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. சொத்துப் பட்டியலில் கடைசி இடம் பிடித்து, ஓரளவு பணக்கார முதல்வராக திரிபுராவின் முதல்வர் மாணிக் சர்க்கார் திகழ்கிறார்.

இந்தப் பட்டியலில் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பும் குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு ரூ.7.8 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.