IMG 20220425 171522 - 2026

ரயில் – நடைமேடைக்கு இடையே விழுந்த பயணி – காப்பாற்றிய பெண் போலீஸ்..

சற்றுமுன் தமிழகம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரெயிலுக்கும் நடைமேடைக்கும் நிலைதடுமாறி இடையே விழுந்த பயணி ஒருவரை அங்கிருந்த ரெயில்வே பெண் போலீஸ் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 11.30 மணியளவில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி செல்லக்கூடிய ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அப்போது அந்த ரெயில் கிளம்பிய போது ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிக்கினார்.

அப்போது அங்கு பணியிலிருந்த ரயில்வே பெண் போலீசார் மாதுரி, சுதாரித்துக் கொண்டு துணிச்சலாக சிக்கிய நபரை ஒற்றைக் கையால் இழுத்து அவரை காப்பாற்றினார். ரயில்வே பெண் போலீசாரின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு ரெயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

IMG 20220425 171522 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.