அப்பாச்சி தீர்வு: வயிற்றுவலி, கண்எரிச்சல், வாத நரம்பு வலி, வண்டுக்கடி, வழுக்கை..!

Published:

health tips - 2026

வயிற்று வலி குணமாக…

பவழமல்லியின் வேர்ப்பட்டை, ஆவாரஞ்செடியின் வேர்ப்பட்டை, ஆலம் விழுது மூன்றையும் உலர்த்தி சம எடை எடுத்து தூள் செய்து கலந்து சம எடை பனங்கற்கண்டு சேர்த்து இரண்டு சிட்டிகையளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை பாலில் கலந்து சாப்பிட்டு வர தீராத வயிற்று வலியும் குணமாகும்.

கண் எரிச்சல் குணமாக…

பொன்னாங்கண்ணிக் கீரையை இடித்துச் சாறெடுத்து நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி நீர் வற்றியதும் இறக்கி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்த தைலத்தை தவைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், கண் பார்வைக் குறைதல் போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

வண்டுக்கடி சரியாக…

செம்பருத்தி இலைகளை இடித்து சாறெடுத்து காலையில் அரை ஆழாக்கு குடிக்க வேண்டும். தினசரி மருந்து தயாரித்து மூன்று நாள்கள் சாப்பிட்டால் குணமாகும். ஆனால், உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். காப்பி, டீ சாப்பிடக் கூடாது.

வாத நரம்பு வலி சரியாக…

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

கொத்துமல்லியை (தனியா) கஷாயம் வைத்து பால் சேர்த்து காபி போல் சாப்பிட்டு வர வாத நரம்பு வலி குணமாகும்.

தலை வழுக்கை விழாமலிருக்க…

8 கிராம் மிளகு, 15 கிராம் எருக்கின் வேர்ப்பட்டை எடுத்து போது மான அளவு வெல்லம் சேர்த்து நன்றாக இடித்து சிறு சிறு மாத்திரைகளாகச் செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வர முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படுவது நின்றுவிடும்.

Related articles

Recent articles

spot_img