சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்துள்ளது.
கடந்த வாரம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த 22-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.39,672 ஆக இருந்தது. அது 23-ந்தேதி ரூ.39,560 ஆக குறைந்தது. 24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறைநாள் என்பதால் அன்றும் அதே விலையில் நீடித்தது.
நேற்று விலை மீண்டும் குறைந்து ரூ.39,296-க்கு விற்கப்பட்டது. இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் இன்று ரூ.39,048-க்கு விற்கப்படுகிறது.
தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4912-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,881-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.70.50-க்கு விற்கப்பட்டது. இன்று வெள்ளி விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.70,500-க்கு விற்கப்படுகிறது.




