ajith 2 - 2026

மதிய உணவிற்கு அழைப்பு விடுத்த அஜித்.. யாரை தெரியுமா..?

சற்றுமுன் அடடே... அப்படியா? சினி நியூஸ் சினிமா
ajith 2 - 2026

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. இந்த திரைப்படம் ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருந்தாலும், அதனை மிஞ்சும் வகையில் சென்டிமெண்ட் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருந்ததால், படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டு இருந்தது.

இருந்தாலும் படம் ஓரளவு நல்ல வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இது அஜித்தின் 61வது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் அஜித் 61 இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் சம்பத் நடிப்பதாக தகவல் வெளியானது. உண்மை என்ன என ஆராயும் போது இந்த படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருவதால் இன்னொரு தெலுங்கு பட சூட்டிங்கிற்காக நடிகர் சம்பத் அங்கு வந்தாராம்.
அதையறிந்த நடிகர் அஜித் அவரை மதிய உண்வுக்கு அழைத்துள்ளார்.

sampath - 2026

அஜித் இந்த படத்தை பற்றி சம்பத்திடம் கூற ஒரு கதாபாத்திரம் இருக்கு கேட்டுபாருங்க, பிடிச்சா நடிங்கனு சம்பத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளாராம்.

அவரும் சரி கேட்டு சொல்கிறேன் என சொல்லியிருக்கிறார். இவரின் கதாபாத்திரங்கள் பல படங்களில் வெயிட்டா இருக்கும். அஜித்துடன் சேர்ந்தால் நிச்சயம் வில்லன் கதாபாத்திரமாகத் தான் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.