December 6, 2025, 12:22 PM
29 C
Chennai

ஸ்கூலில் இருந்து வரும் அண்ணனை வரவேற்கும் அன்புத்தம்பி!

brothers 1 - 2025

குழந்தைகளின் பாசத்தை பார்த்து சமூக வலைதளங்களில் நெகிழ்வான பதிவுகள் பரவலாக பதியப்பட்டு வருகிறது.

பள்ளியில் இருந்து வரும் அண்ணனை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பியின் வீடியோ இது. வைரலாகி வரும் வீடியோவில், பள்ளிப் பேருந்துக்காக சாலையில் காத்து நிற்கும் சிறுவன் பரபரப்புடன் காத்துக் கொண்டிருக்கிறான்.

தொலைவில் பள்ளிப் பேருந்து வருவதை பார்த்தவுடனேயே, குழந்தை மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. அந்த குதூகலம், தம்பியின் பாசத்தை காட்டுவதாக இருப்பதால், பார்ப்பவர் எல்லாம் தொடர்ந்து இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

பள்ளிப் பேருந்தை தூரத்திலிருந்து பார்த்தவுடன் அந்தச் சிறுவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்ததைக் காணலாம். பள்ளிப் பேருந்து அவன் அருகில் வர, அவனது மகிழ்ச்சி மேலும் மேலும் அதிகரிக்கிறது.

பேருந்து வந்து நின்றவுடன் அவனது மகிழ்ச்சி பன்மடங்கு அதிகரித்தது. ஜன்னலோர இருக்கையில் அண்ணன் அமர்ந்திருப்பதைப் பார்த்து, உலகத்தில் உள்ள சந்தோஷம் எல்லாம் கிடைத்துவிட்டதைப் போல் ரியாக்ட் செய்யும் குழந்தையின் முகபாவங்கள் அற்புதமாய் இருக்கிறது.

தம்பியின் பாசத்துக்கு உரிய அண்ணன், பேருந்தில் இருந்து இறங்கியதும் ஓடி வந்து தம்பியை கட்டிப் பிடிக்கிறான்.

தம்பியை அண்ணன் தட்டிக்கொடுத்தால், சுட்டித் தம்பியும் அண்ணனின் முதுகில் தட்டிக் கொடுக்கிறான். சிவப்பு உடை போட்ட பாசக்கார தம்பியின் பாசம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அட்டகாசமான பாசம் என்று சிலர் பதிவிட்டால், அன்புக்கு அண்ணன், ஆசைக்கு தம்பி என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிக ரசித்து பகிர்ந்து கொண்டதால், இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவின் கமெண்ட் பகுதி முழுவதுமே மகிழ்ச்சியை காட்டும் எமோஜிகளால் நிரம்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories