தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,
- தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை.தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அவசியம் இல்லை.
- மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் பொது. இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும்.
27 மாவட்டங்களில் தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் ஆங்காங்கே பரவல் உள்ளது. 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. உடனடியாக மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் கவலை பட வேண்டிய கட்டத்தில் இல்லை. அக்கறை காட்ட வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்றும் தர்மபூரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது என சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் 1,000 பேரில் 3 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகிறது என்றும், கடந்த மார்ச் 2020 ஒப்பிட்டு பார்க்கும் போது பல்வேறு அனுபவங்கள் கிடைத்துள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணிவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும்தான் தற்போது வல்லுநர்கள் கருத்தாக உள்ளது என்றார்.
ஊரடங்கு அமல்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் தீவிர படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது தமிழ்நாட்டில் இல்லை. ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறினார்.
மருத்துவமனைகளில் மின்வெட்டு பிரச்சனை இல்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.





