விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக
இன்று சசிகலா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது,
ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். இது முடிந்ததும் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக நிச்சயம் விரைவில் மேல்முறையீடு செய்வேன்.
என கூறினார்.இதன் பின்னர் சசிகலாவிடம் கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் உங்களுக்கு சந்தேகம் ஏதும் உள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்காமல் அவர் புறப்பட்டு சென்றார்.
பின்னர் திருச்சி விமான நிலையத்தில் வைத்தும் சசிகலாவிடம் நிருபர்கள் கேள்விகள் கேட்டனர்.அரசியல் களத்தில் கூட்டணி அமைப்பீர்களா? தனித்து போட்டியிடுவீர்களா? என்கிற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா இங்கு தானே இருக்கிறீர்கள்? பொறுத்திருந்து பாருங்கள் என்று பதில் அளித்தார். உங்களை வரவேற்க வரும் கட்சியினரை தினகரன் நீக்குவதாக கூறப்படுகிறதே என்கிற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, தற்போது கோவிலுக்கு செல்கிறேன். இது பற்றி பின்னர் பதில் அளிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சசிகலா திருக்கடையூர் சிக்கல் கோயில்களுக்கு செல்கிறார்.





