மாணவர்கள் மொபைல் எடுத்து வர தடை வேலூர் ஆட்சியர் அதிரடி

வேலூர் மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளுக்கு மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்படுவதாகவும், இதனை மீறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் இன்று கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், வேலுார் அருகே தொரப்பாடி அரசு பள்ளி வகுப்பறையில், மாணவியர் முன், பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் வீரத்தை காட்ட, இரும்பாலான இருக்கை மற்றும் மேஜைகளை உடைக்கும் வீடியோ வெளியானது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி, வேலுார் ஆர்.டி.ஓ பூங்கொடி, மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் ஆகியோர் நேற்று அப்பள்ளியில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சம்மந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோரை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரச்செய்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விசாரணை நடத்தினார்.

அப்போது, பள்ளியில் பிரிவு உபசார விழா நடத்த மாணவர்கள் கேட்டதற்கு தலைமை ஆசிரியர் அனுமதிக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், மேஜை நாற்காலிகளை உடைத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவர்கள் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கையில் மாணவர்கள் பள்ளிக்கு மொபைல்போன் எடுத்து வர தடை விதித்துள்ளது. மொபைல் போன் எடுத்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரவை மீறி வகுப்பறைக்குள் மொபைல்போன்களை மறைத்து எடுத்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

images 2022 04 26T131502.330 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories