டீம் ஒர்க் என்றால் இது தான்..: ஆனந்த் மஹிந்த்ரா பதிவு!

friends - 2026

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா டீம் ஒர்க் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள சிறுவர்களின் வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா சோசியல் மீடியாவில் படு சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த செய்தி.

தனது பிசியான வேலைகளுக்கு நடுவிலும், திறமையாளர்களை பாராட்டுவதற்கும், இந்தியாவின் பெருமைகளை பறைசாற்றும் நிகழ்வுகளை பகிர்வதற்கும் ட்விட்டரை பயன்படுத்தி வருகிறார். அதேபோல் சமூகத்திற்கு ஊக்கமளிக்க கூடிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமையன்று, அவர் ட்விட்டரில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, ஒத்துழைப்பு மற்றும் டீம் ஒர்க் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள வீடியோவில் இரண்டு சிறுவர்கள் சைக்கிள் மிதிப்பது பதிவாகியுள்ளது. சிறுவர்கள் சைக்கிள் ஓட்டி மகிழும் அந்த வீடியோவை வெறும் கேளிக்கை நிகழ்வாக மட்டும் கடந்து செல்லாமல், அதில் உள்ள உண்மையான விஷயங்களை சமூகத்தின் பார்வைக்கு ஆனந்த் மஹிந்திரா கொண்டு வந்துள்ளார்.

அந்த வீடியோவில், ஒரே சைக்கிளை இரண்டு சிறுவர்கள் ஓட்டிச் செல்கின்றனர். இதில் என்ன பிரமாதம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் சிறுவர்கள் சைக்கிளின் இரண்டு பெடல்களிலும் நின்று கொண்டு, ஒருவர் மாற்றி ஒருவர் சரியான விசையில் அழுத்தி, சைக்கிளை முன்னோக்கி செல்ல வைக்கின்றனர்.

அதே நேரத்தில் பாலிவுட் படமான ஷோலேயின் புகழ்பெற்ற பாடல் ‘யே தோஸ்தி ஹம் நஹி தோடேங்கே’ பின்னணியில் ஒலிக்கிறது. சிறுவர்கள் ஒன்றாக சவாரி செய்வது மட்டுமல்லாமல், அவர்களின் முயற்சிகளால் வேகமாகவும் சைக்கிளை ஓட்டுவது பதிவாகியுள்ளது.

தங்களது எடையை சரியாக சமநிலைப்படுத்துவதன் மூலமாக சைக்கிளை எவ்வித சிக்கலும் இன்றியும், அதே சமயத்தில் குழந்தை பருவத்திற்கே ஏற்ற குதூகலத்துடனும் ஓட்டிச் செல்கின்றனர்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா “ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் கூட ஒத்துழைப்பு மற்றும் டீம் ஒர்க் போன்ற நற்பண்புகளைத் தெரிவிக்க இப்படியொரு சிறந்த வீடியோவை கொண்டிருக்காது!” என பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவால் பகிரப்பட்ட சமீபத்திய வீடியோ ஏற்கனவே பல ரீட்வீட்களுடன் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ரீ-ட்வீட் மற்றும் 91 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன. “இது உண்மையில் குழுப்பணி, நட்பு, பிணைப்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி, படைப்பாற்றல், திறமை, புதுமை ஆகியவற்றை காட்டும் ஒரு சிறந்த வீடியோ” என ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது யூஸர்”அவர்கள் எவ்வளவு அழகாக சமநிலையை உருவாக்கி, தங்கள் ஆற்றலில் பாதியை பயன்படுத்து முன்னேறுகிறார்கள். எனவே டீம் ஒர்க் எனர்ஜியை சேமிக்கவும் மற்றும் சிறந்த முடிவை எடுக்கவும் உதவுகிறது” என பலரும் பல்வேறு வகைகளில் கமெண்ட் செய்து சிறுவர்களை பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories