ஆனந்த் மஹிந்திரா காண விரும்பும் நபர்..!

milk bike - 2026

பால் வினியோகம் செய்வதற்கு வினோத வாகனத்தை இளைஞர் ஒருவர் பயன்படுத்தும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனத்தின் தலைவர். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பவர்களில் ஒருவர்.

நல்லதைப் பாராட்டவும், பகிரவும் இவர் தயங்கியதே இல்லை. தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

milk bike 1 - 2026

சமீபத்தில் `நான் இந்த மனிதரைச் சந்திக்கணும்’ என்கிற கேப்ஷனோடு வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

பார்முலா கார் பந்தயங்களில் பயன்படுத்தப்படும் வாகனத்தைப்போல சொந்தமாக ஒரு வாகனத்தை டிசைன் செய்திருக்கிறார் இவர். பால் விநியோகம் செய்ய அந்த வண்டியை இவர் பயன்படுத்தி வருகிறார். 3 சக்கரங்களை கொண்ட இந்த வாகனத்தை ஹெல்மெட் அணிந்தவாறு இந்த இளைஞர் இயக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் தீயாக பரவிவருகிறது.

அதில் F1 கார் போல தோற்றமளிக்கும் வாகனமொன்றில் பால் கன்டெயினர்களை வைத்து ஓட்டி செல்லும் ஓட்டுநரின் காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோ Roads Of Mumbai என்கிற பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது. அந்த வீடியோவின் கேப்சனில், “நீங்கள் F1 டிரைவராக விரும்புகிறீர்கள். ஆனால் குடும்பத்தொழிலில் உதவி செய்ய வலியுறுத்திக்கிறார்கள்” என வேடிக்கையாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த ட்வீட்டை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா “இவரின் வாகனம் சாலை விதிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்பட்டதா என்பது தெரியாது. ஆனால் இவரின் ஆர்வம் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டது.

இந்த நாட்களில் நான் பார்த்த கூலான விஷயம் இதுதான். நான் இந்த வீரரைச் சந்திக்க விரும்புகிறேன்” என பதிவிட்டு இருந்தார். இதனை வரவேற்கும் விதமாக நெட்டிசன்கள் கமென்ட் பதிவு செய்து வருகின்றனர்

நெட்டிசன்கள் “இதை பார்க்க பேட்மேன் பால் விநியோகம் செய்வது போல இருக்கிறது” என்றும் “நான் சமீபத்தில் பார்த்த மிகச்சிறந்த பந்தய வாகனம் இதுதான்” என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories