பிளஸ்2 பொதுத்தேர்வு மே5ல் துவக்கம்-பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கு மே 5ந்தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை பள்ளிகளில் பயிலும் 8.37 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் இத்தேர்வினை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந்தேதி 3,936 மையங்களில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பிளஸ்1 பொதுத்தேர்வு 10ந்தேதி தொடங்குகிறது. 5ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 31ந்தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை பள்ளிகள் வழியாக மட்டும் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு தயாராக உள்ளனர்.

பொதுத்தேர்வினை எந்த ஒரு சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.நாளை மறுநாள் தேர்வு தொடங்க இருப்பதால் வினாத்தாள்கள் அனைத்தும் சென்னையில் இருந்து தனித்தனி வாகனங்களில் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வாகனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றடைந்தன. அன்றே அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வுத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.இதுவரையில் இல்லாத அளவிற்கு வினாத்தாள் பாதுகாப்பு அறைக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வுத்துறை தயாரித்து வழங்கும் வினாத்தாள்கள் பாடம் வாரியாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளது.

அந்த வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வினாத்தாள் அறை ‘சீல்’ வைத்து மூடப்பட்டு உள்ளது.

ஸ்ட்ராங் ரூம் என்று சொல்லக்கூடிய அந்த அறையில் வினாத்தாள் கட்டுகள் வைத்து பாதுகாக்கப்படும்.
சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு
அந்த அறையை 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்கிறார்கள்.

images 71 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories