டீக்கடைகளில் 481 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்!

tea - 2026

திருச்சியில் பேக்கரி மற்றும் டீக்கடையில் உணவு பாதுகாப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 481 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள கடைகளில் கலப்பட டீ தூள் பயன்படுத்துவதாக, உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் மருத்துவர் ரமேஷ் பாபு தலைமையிலான குழுவினர் செவ்வாய்கிழமை இரவு கே.கே.நகர் பகுதியில் பிரபல பேக்கரி மற்றும் தேநீர் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வின்போது 2 இடங்களிலும் சுமார் 6 கிலோ கலப்பட டீ தூள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து மேற்கொண்ட விசாரணையில், கே.கே.நகர் சீதாதேவி கோயில் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் என்பரிடம் 75 கிலோ கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறையினர், தொடர்ந்து, புஷ்பராஜின் சகோதரர்கள் பொன்னகர் கருணாகரன் என்பவரிடமிருந்து 240 கிலோ கலப்பட தேயிலைத்தூளையும், விஜயகுமார் என்பவரிடம் இருந்து சுமார் 160 கிலோ கலப்பட தேயிலை தூளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கலப்படத்திற்கு பயன்படுத்தும் ரசாயன பொருட்கள் என 481 கிலோ கலப்பட தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக 4 பேரின் மீது வழக்கு தொடர்வது தொடர்பாக 8 சட்டப்பூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், கலப்பட தேயிலை தூளை விற்பனை செய்வது தெரியவந்தால், உணவு பாதுகாப்புத்துறையை அணுக வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories