மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் மத்திய அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ரூ. 1,500 கோடியை ஒதுக்கி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
மீதம் உள்ள நிதியை அக்டோபர் 26-ந்தேதிக்குள் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மொத்த திட்ட மதிப்பான ரூ. 1,977 கோடியில் ஜைக்கா நிறுவனம் ரூ. 1,500 கோடியை ஒதுக்கி உள்ளதால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





