சுரங்கத்தில் கிடைத்த வைரம்.. விவசாயிக்கு அடித்த அதிஷ்டம்!

dimond - 2026

அதிர்ஷ்ட தேவதை கொடுக்கணும்னு முடிவு செய்துவிட்டால் கூரையை பொய்த்துக்கொண்டு கொடுப்பாள் எனக்கூறுவார்கள் அப்படியொரு சம்பவம் தான் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவருக்கு நடந்துள்ளது

அங்கிருந்த சுரங்கம் மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது. சுரங்க வேலைக்குச் சென்ற ஏழை விவசாயி ஒருவருக்கு அவர் கனவிலும் நினைத்து பார்க்காத ஜாக்பாட் அடித்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டம் வைரச் சுரங்கங்களுக்கு பெயர் போனது. அந்த சுரங்களில் அப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேலையில்லாத சமயங்களில் வைரங்களை தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவ்வாறு தேடி எடுக்கும் வைரத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை அவர்கள் ஏலத்தில் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையில் அரசுக்கான வரி மற்றும் ராயல்டி போக மீத தொகையை கொடுப்பார்கள். இது அப்பகுதியில் வழக்கமாக நடக்கூடிய சம்பவமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் பன்னா மாவட்டத்தில் உள்ள பட்டி பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் சிங் யாதவ், இவர் தனக்கான சிறிய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். அதிலிருந்து கிடைக்கும் வருவாய் குடும்பத்தை நடத்த போதாததால், கடந்த 3 மாதத்திற்கு முன்பு அப்பகுதியில் உள்ள வைரச்சுரங்கம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலைக்குச் சென்றவருக்கு பளபளப்பான கண்ணாடி போன்ற பொருள் கண்ணில் பட்டுள்ளது. அதனை கையில் எடுத்து பார்த்தவர் தனக்கு கிடைத்தது வைரம் என்பதை அறிந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அந்த வைரக்கல்லை வழக்கமான நடைமுறைகளின் படி பிரதாப், அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து வைரம் தொடர்பான அதிகாரி ரவி பட்டேல் கூறுகையில், பட்டி பகுதியில் உள்ள சுரங்கத்தில் பணிபுரியும் தொழிலாளியான சிறு விவசாயி பிரதாப் சிங் யாதவ், அங்கிருந்து ஒரு வைரக்கல்லை கண்டுபிடித்துள்ளார்.

இந்த வைரக்கல் 11.88 கேரட் உள்ளது. இது விரைவில் ஏலத்திற்கு விடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
திடீர் ஜாக்பாட்டால் திக்குமுக்காடி போயிருக்கும் பிரதாப் சிங் கூறுகையில், “ஒரு சிறிய விவசாய நிலம் கொண்ட ஏழை விவசாயி. கூலி வேலையும் செய்கிறேன். கடந்த மூன்று மாதங்களாக இந்த சுரங்கத்தில் கடினமாக உழைத்து வந்த எனக்கு இந்த வைரம் கிடைத்துள்ளது.

அதனை நான் வைர அலுவலகத்தில் டெபாசிட் செய்துள்ளேன். இந்த வைர கல் மூலமாக கிடைக்கும் பணத்தினைக் கொண்டு தொழில் துவங்கவுள்ளேன். மேலும், எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இந்த தொகையை பயன்படுத்துவேன்” என்கிறார்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தனியார் நிறுவனங்களின் கணிப்பு படி இந்த வைரம் 50 லட்சம் ரூபாய் வரை ஏலம் போகலாம் எனக்கூறப்படுகிறது. இதில் அரசின் வரி மற்றும் ராயல்டி தொகை போக பெரும் தொகை பிரதாப் சிங் யாதவிற்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

பன்னா மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் இன்னும் 12 லட்சம் கேரட் வைரங்கள் வெட்டி எடுக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories