கேரளாவில் மீன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சிகிச்சையில்..

கேரளாவில் ஷவர்மா சிக்கன் உணவு சாப்பிட மாணவிபலி பலர் சிகிச்சை யில் உள்ள நிலையில் தற்போது மீன் உணவு சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பிஜு. இவர் அந்த பகுதியில் உள்ள கல்லறையில் ரூ.200க்கு குதிரை கானாங்கெளுத்தி மீன் வாங்கி உள்ளார். அதனை குழம்பு வைத்து குடும்பத்தினர் சாப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் பிஜூவின் மகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இரவில் பிஜூவின் மனைவிக்கும் வயிற்று வலி ஏற்பட்டது.இந்த சூழலில் பிஜூ மற்றும் அவரது 2வது மகள் ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து 4 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை கலந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கருதினர். இந்த நிலையில் பிஜு மீன் வாங்கிய கடையில் மறுநாள் மற்றொருவர் மீன் வாங்கிய போது மீனில் இருந்து புழுக்கள் வந்துள்ளன.எனவே பிஜு வாங்கிய மீன் சுகாதாரமற்றதாக இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. வெஞ்சா ரம்மூடு போலீசார் மற்றும் கல்லறை கிராம அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீன் மாதிரிகளை சேகரித்தனர்.

ஏற்கனவே கேரளாவில் ஷவர்மா சிக்கன் உணவு சாப்பிட மாணவி பலி பிரச்சினை இருக்கும் நிலையில் தற்போது மீன் உணவு சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

kitchen fish smell - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories