திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு!

Thirupathi - 2026

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் இரவுவரை 76 ஆயிரத்து 324 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 38 ஆயிரத்து 710 பக்தர்கள் தங்களது தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

உண்டியலில் ரூ4.73 கோடியை காணிக்கையாக செலுத்தினர். இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் உள்ள 23 அறைகளில் பக்தர்கள் காத்திருந்து 6 மணி நேரத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஏழுமலையான் கோயிலில் வாரம்தோறும் நடக்கும் வாராந்திர சேவைகளான அஷ்டதள பாதபத்ம ஆராதனை, திருப்பாவாடா, நிஜபாத தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு தடை
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேற்று மத பிரசாரங்களை குறிக்கும் விதமான படங்கள், துண்டு பிரசுரங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர் மற்றும் நடிகைகளின் புகைப்படங்கள், கட்சி கொடிகள் திருமலைக்கு கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்த நடைமுறை உள்ளது.

சில பக்தர்கள் இதையறியாமல் தங்கள் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்தும், ஸ்டிக்கர் ஒட்டியும் வருகின்றனர்.

அவ்வாறு வரக்கூடிய வாகனங்களை அலிபிரி சோதனைச்சாவடியில் உள்ள தேவஸ்தான பாதுகாவலர்கள் நிறுத்தி, அதுபற்றி பக்தர்களுக்கு தெரிவித்து அகற்றி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories