images 36 - 2026

பாஜக ஆட்சிக்கு வந்து 8-ம் ஆண்டு நிறைவு விழா-மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி புத்தக வெளியீடு..

சற்றுமுன்

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து 8-ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நாடு முழுவதும் 15 நாள் பிரச்சாரத்தை மேற்கொள்ள அக்கட்சி முடிவு செய்துள்ளது.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 8-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியின் நற்பணிகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கட்சியினருக்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமரின் பல்வேறு சாதனைகள் மக்களிடையே சென்றடையவும், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் வாழ்க்கையை மேம்படுத்த, மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். சமூக ஊடகங்கள் மற்றும் திரையரங்குகளில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை விளம்பரப்படுத்தவும் பாஜக தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளின் சேவை நல்லாட்சி மற்றும் ஏழை நலன் என்ற தலைப்பில் வரும் 30-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை பிரச்சாரத்தை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இந்த நிலையில் டெல்லியில் இன்று  மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி புத்தகத்தை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார். பிரதமரின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.புத்தகத்தை
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெற்றுக்கொண்டனர்.

images 36 - 2026
images 37 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.