தந்தையின் பயோபிக்கில் தந்தை ரோலில் நடிக்க மறுத்த மகேஷ்பாபு!

Published:

mahesh Babu - 2026

தனது அப்பாவின் பயோபிக்கில் தான் நடிக்க மாட்டேன் என்றும், அதே சமயம் அதை சினிமாவாக தயாரிக்க தான் தயாராக உள்ளதாகவும் மகேஷ் பாபு சொல்லி உள்ளார்.

தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் மகேஷ்பாபு, தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரொமான்டிக் காமெடி தில்லர் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்காரு வாரி பாட்டா படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் மகேஷ் பாபு, பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருந்து வருகிறார்.

அப்படி பேட்டி ஒன்றில் மகேஷ் பாபுவிடம், உங்கள் அப்பாவின் வாழ்க்கை பயோபிக்காக எடுக்கப்பட்டால் அதில் நீங்க நடிப்பீர்களா என கேட்கப்பட்டது. இதற்கு நடிக்க மாட்டேன் என சட்டென மறுப்பு கூறி விட்டார் மகேஷ்பாபு.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணா, தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர். மகேஷ்பாபும் அவரும் இணைந்து சில படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

மகேஷ்பாபுவின் சில படங்களில் அவரது அப்பாவின் ரெஃபரன்ஸ் இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். கிருஷ்ணா நடித்த அல்லூரி சீத்தாராமராஜு படத்தின் ரெஃபரன்ஸ் மகேஷ்பாபு நடித்த சரிலேரு நீக்கிவாரு படத்தில் பார்க்க முடியும்.

இதனால் அவர் அப்பாவின் பயோபிக்கிலும் மகேஷ்பாபு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஹீரோவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதனால் மகேஷ் பாபு இதில் நடிக்க ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் நடிக்க மகேஷ் பாபு நோ சொல்லி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இதற்கு காரணம் என்ன என்று மகேஷ்பாபுவிடமே விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், என்னை பொறுத்தவரை எனக்கு என் அப்பா தெய்வம் மாதிரி.

அதனால் அவரின் பயோபிக்கில் நான் நடிக்க போறதில்லை. அதில் நடிப்பதை விட அதை தயாரிக்கவே நான் மிகவும் விரும்புகிறேன். சரியான திரைக்கதையாக அமைக்கப்பட்டால் அந்த படத்தை நானே தயாரிக்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

Related articles

Recent articles

spot_img