என் படுக்கைல நீ என்ன பண்ற..? தள்ளிவிட்டு படுத்த குட்டி!

Published:

elephant 2 - 2026

குழந்தைகள் அதற்கு சொந்தமாக வைத்திருக்கும் ஒரு பொருளை மற்றவர்கள் எடுத்துக்கொண்டால் எப்படி ஆர்ப்பாட்டம் செய்து அதனை திரும்ப பெற விரும்புமோ அதேபோல யானைக்குட்டி ஒன்று அதற்கு சொந்தமான பெட் மீது படித்திருந்த நபரை விரட்ட முயலும் காட்சி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

இது பலமுறை வாட்ஸ்அபில் வைரலான ஒன்று. தற்போது சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில், டாக்டர்.சாம்ரத் கவுடா ஐஎஃப்எஸ் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோவில், வேலிக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் குட்டியானை ஒன்று கதவுகளை வேகமாக திறந்துகொண்டு வேலியை விட்டு வெளியேறுகிறது.

வேலிக்கு வெளியே ஒரு ஊதா நிற பெட்டின் மீது வாலிபர் ஒருவர் படுத்து கொண்டிருக்கிறார், கதவை திறந்துகொண்டு வெளியேறிய யானைக்குட்டி வேகமாக அந்த நபரை நோக்கி ஓடுகிறது.

அந்த பெட்டின் மீது தனது முன்னங்கால்களை வைத்துக்கொண்டு அதன் மீது படுத்திருப்பவரை தனது தும்பிக்கையால், கால்களாலும் உதைத்து கீழே தள்ள முயல்கிறது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

பின்னர் அவரை ஒருவழியாக கீழே தள்ளி பெட்டின் மீது யானை உட்கார்ந்து கொள்கிறது, மீண்டும் அவர் பெட் மீது உட்கார அவரை கீழே தள்ளும் நோக்கில் சென்ற யானை செடிகளின் மீது முட்டி கொள்கிறது.

அதன் பின்னர் கோபித்துக்கொண்டு சென்ற அந்த குட்டியானையை அந்த நபர் சமாதானம் செய்து கொண்டு வந்து அந்த பெட்டின் மீது படுக்க வைப்பதுடன் வீடியோ முடிவடைகிறது.

இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோவிற்கு இதுவரை பதினோறாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளது.

Related articles

Recent articles

spot_img