IMG 20220513 170732 212 - 2026

சான்றிதழ் கட்டண உயர்வு ரத்து..

சற்றுமுன்

கடுமையான எதிர்ப்பு நிலவிய நிலையில் சான்றிதழ் கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் திரும்ப பெற்றுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைந்துபோன சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கான உயர்த்தப்பட்ட கட்டணம் திரும்ப பெறப்பட்டு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சான்றிதழ் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்றும், பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தப்படும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

IMG 20220513 170732 212 - 2026
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.