வைகாசி மாதம் பிறந்தவர்கள் குணநலன்கள்..!

astrology - 2026

சூரியன் ரிஷப ராசியில் நுழையும் மாதமே வைகாசியாகும். வைகாசி மாதம் மங்களகாரமான காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என கருதப்படுகிறது.

நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி மாதமாகும்.

வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆபார ஞாபகசக்தி இருக்கும். இவர்கள் மற்றவர்களுக்கு யோசனைகள் சொல்வதில் வல்லவர்கள்.

இவர்களின் பலமே பொறுமை தான். இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை எளிதாக அடையாளம் காண்பவர்கள் இவர்கள்.

இவர்களுக்கு இயற்கையிலேயே வசீகரத் தோற்றம் அமைந்து இருக்கும். ஆடம்பரமாக வாழ்வதை விரும்புவார்கள். பெண்களிடம் நயமும், நளினமும் கலந்திருக்கும். இவர்கள் இன்பம், துன்பம், நிறைகுறை போன்றவற்றை சமமாக பாவிப்பார்கள்.

இவர்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அதில் முழுமையாக தெரிந்து கொள்ள நினைப்பார்கள். மனதில் வருத்தம், கோபம் இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.

குடும்பத்தில் இவர்கள் முக்கியமானவராக இருப்பார்கள். உற்றார், உறவினர், உடன்பிறப்பு எல்லோரையும் அனுசரித்துச் செல்வார்கள். சில விஷயங்களில் பிடிவாதமாக இருந்து சாதிப்பார்கள். குற்றம், குறைகளை சரியான நேரத்தில் சுட்டிக் காட்ட தயங்கமாட்டார்கள்.

இவர்கள் கையில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். தங்களின் சுய தேவைக்கும், ஆசைக்கும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்ய தயங்கமாட்டார்கள்.

தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம் ஆகியவற்றில் நிர்வாகத் திறமையும், சமயோசித புக்தியும், யுக்தியும் நிறைந்தவர்களாக இருப்பார்கள்.

பல்துறை வித்தகர்களாகவும், கலைத்துறையில் சாதனை புரியும் யோகமும் உண்டு. சிறந்த பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், பதிப்பகங்களை நடத்துபவராகவும், அச்சகத் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

பயணங்கள் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். சுற்றுலாக்கள், புனித ஸ்தலங்களுக்கு செல்வது மிகவும் பிடிக்கும். உல்லாசப் பயணங்களிலும் விருப்பம் உடையவர்கள்.

தனிமையை விரும்புபவர்கள், இயற்கையை, கலையை, அழகை ஆராதிப்பவர்கள். தங்களின் பயண அனுபவங்களை மிகுந்த ரசனையுடன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

இவர்களுக்கு உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் அடிக்கடி உண்டாகும். ரத்த சம்பந்தமான குறைபாடுகள் இருக்கும். சைனஸ், தும்மல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றால் அவதிப்படுவார்கள். வயது ஏறஏற ஞாபகமறதி நோய் வர வாய்புக்கள் உண்டு. நரம்புத் தளர்ச்சி பிரச்சனையும் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இவர்களுக்கு நல்ல ஆற்றலும், நிர்வாகத் திறமையும் உள்ள பெண் / ஆண் வாழ்க்கைத் துணையாக வருவார்கள். சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

புதன், செவ்வாய், சுக்கிரன் அனுகூலமாய் இருக்கப் பிறந்தவர்கள், மனைவி மூலம் பல யோக, போக, சுக பாக்கியங்களை அனுபவிப்பார்கள். ஒரு சிலருக்கு உயர்ந்த பதவி, புகழ், செல்வம், செல்வாக்குள்ள மனைவி அமைவதற்கான யோகமும் உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories