கொள்ளையடித்த சாமி சிலைகளை பயங்கர கனவு வந்ததால் திருப்பி வைத்த கொள்ளையர்கள்!

Statues - 2026

சித்ரகூட் பாலாஜி கோயிலில் 16 சாமி சிலைகள் கொள்ளை போன விவகாரத்தில், இரவில் பயங்கரமான கனவு வருவதாக கூறி கொள்ளையடித்த சிலைகளை கொள்ளையர்கள் திருப்பி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகூடத்தில் உள்ள பாலாஜி கோயிலில், 16 பழமையான சிலைகள் கடந்த சில தினங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டன.

அவற்றில் 14 சிலைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் கோயிலில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். இந்த சிலைகளுடன், ஒரு கடிதத்தையும் கொள்ளையர்கள் விட்டுச் சென்றுள்ளனர்.

அதில், தாங்கள் மனம் திருந்தி கோயில் சிலைகளை திருப்பி வைத்துவிட்டதாக கூறியுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்தும் வருகின்றனர்.

இதுகுறித்து சதர் கோட்வாலி போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் சிங் கூறுகையில், ‘கடந்த ​மே 9ம் தேதி பாலாஜி கோயிலில் இருந்து பல கோடி மதிப்பிலான பழமையான 16 சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

கோயில் பூசாரி மஹந்த் ராம்பாலக் மற்றும் அடையாளம் தெரியாத கொள்ளையர்கள் மீது வழக்குபதியப்பட்டது.

கொள்ளை போன 16 சிலைகளில் 14 சிலைகள் ஜவஹர்நகரில் வசிக்கும் பூசாரி மஹந்த் ராம்பாலக் என்பவரது வீட்டின் அருகே கொள்ளையர்கள் வைத்துவிட்டு சென்றுள்ளனர். கடிதம் ஒன்றையும் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அதில், தாங்கள் மனம் திருந்தியதால் கோயில் சிலைகளை திருப்பி வைத்துவிட்டதாகவும், இரவில் தங்களுக்கு பயங்கரமான கனவுகள் வருவதாகவும் எழுதியுள்ளனர்.

தொடர் விசாரணைக்கு பின்னர், இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். 16 சிலைகளில் எஞ்சிய இரண்டு சிலைகள் குறித்து அவர்களிடம் விசாரித்து வருகிறோம்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories