4 மாதங்கள்.. நீண்ட இரவுக்கு தயாரான அண்டார்டிகா..‌!

Antarctica - 2026

பூமியின் தென் துருவமான அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி ஒரு துளி கூட சென்றடையாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாம் மிகவும் குறைந்த அளவு தெரிந்து வைத்துள்ள இடங்களில் ஒன்று உலகின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகா. முற்றிலும் பனிப்பாறைகளில் மூடியுள்ள அண்டார்டிகாவில் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படு வருகிறது.

அதன்படி சமீபத்தில் தான் பல மாத முன் தயாரிப்புக்குப் பிறகு, ஐரோப்பாவின் கான்கார்டியா ஆராய்ச்சி நிலையத்தில் 12 ஆய்வாளர்களை கொண்ட குழுவினர் ஆய்வுகளை மேற்கொள்ள அண்டார்டிகா பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஆய்வாளர்கள் சரியாக இந்த காலகட்டத்தில் அண்டார்டிகா செல்ல முக்கிய காரணம் உள்ளது. ஏனென்றால், அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரியனே இருக்காது.

இதன் காரணமாக அடுத்து 160 நாட்களுக்கு மேலாக அங்கு இருண்ட நிலையே நீடிக்கும். ஆய்வாளர்கள் அனைவரும் அங்கு வரவிருக்கும் நீண்ட குளிர்கால இரவுகளுக்குத் தயாராகவே உள்ளனர்.

இந்தவொரு நிலைமையில் தான் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆய்வாளர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அங்கு தனிமையில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

கான்கார்டியா ஆராய்ச்சி நிலையம் சமீபத்தில் இந்த நீண்ட இரவுக்கு முந்தைய கடைசி சூரிய அஸ்தமனத்தை பதிவு செய்தது. இந்த சூரிய அஸ்தமனம் நீண்ட இரவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது.

அடுத்த 4 மாதங்களுக்கு ஒட்டுமொத்த அண்டார்டிகாவே இருளில் மூழ்கும். சூரிய ஒளி என்பதே அங்கு இருக்காது. இதை ஆய்வாளர்கள் லாங் நைட் என்று அழைக்கிறார்கள்.

long night - 2026

தங்களின் முன் தாயாரிப்பு அனைத்திற்கும் நேரம் வந்துவிட்டதாகவும் அடுத்து வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முக்கியமானதாக இருக்கும் என்றும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உலகில் அனைத்து நாடுகளிலும் 4 வகையான பருவ காலம் இருக்கும். ஆனால், அண்டார்டிகா அடர்ந்த பனியால் மூடப்பட்டு இருப்பதால் அங்கு கோடை மற்றும் குளிர்காலம் என இரண்டு பருவங்கள் மட்டுமே இருக்கும்.

இப்பகுதியில் கோடையில் பகலும், குளிர்காலத்தில் இருளும் இருக்கும். இங்கு இப்போது ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்யும் இடம், கடல் மட்டத்திலிருந்து 3233 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு பல நேரங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட -80 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.

நமது பூமி ஒரு குறிப்பிட்ட டிகிரி கோணத்தில் சாய்ந்து இருப்பது, சூரியனை சுற்றி வரும் பாதை ஆகியவை காரணமாகவே பூமியில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பருவங்கள் ஏற்படுகின்றன.

அண்டார்டிகா பகுதியை பொறுத்தவரை கோடையில் அது சூரியனை நோக்கி சாய்ந்த நிலையில் இருக்கும். குளிர்காலத்தில், அது சூரியனில் இருந்து விலகி இருக்கும்.

கடந்த மே 13 அன்று இறுதி சூரிய அஸ்தமனத்துடன், ‘ Long Night ‘ எனப்படும் நீண்ட இரவு காலகட்டத்திற்குள் அண்டார்டிகா நுழைந்து விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

உலகின் பிற இடங்களில் 4 பருவக் காலங்கள் நிகழ்வதே இயற்கையின் அதிசயம். ஆனால், அண்டார்டிகாவில் மட்டும் கோடைக்காலமும், குளிர்காலமும் மட்டுமே இருக்கும்.

பூமியின் மிகவும் குளிரான பகுதியான இங்கு, வருடத்தின் 6 மாதங்கள் சூரிய ஒளியிலும், எஞ்சியுள்ள 6 மாதங்கள் இருளிலும் மூழ்கும். இந்த நீண்ட இரவு காலத்தை, விண்வெளி வீரர்கள் நீண்ட விண்வெளிப் பயணங்களுக்குச் செல்வதற்கு முன், கடுமையான விண்வெளி சூழலை சமாளிப்பதற்காகப் பயிற்சி எடுக்க பயன்படுத்திக் கொள்கின்றனர்.

லாங் நைட் என்று அழைக்கப்படும் இந்த காலகட்டத்தில் ஆய்வாளர்கள் மிகவும் இக்கட்டான சூழலில் இருக்க வேண்டும். இதுபோன்ற காலகட்டத்தில் மூளையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

இந்தச் சூழல் கிட்டதட்ட வேறு கிரகத்தில் இருக்கும் சூழலுக்கு நெருக்கமாக உள்ளதால் இந்த காலகட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது .

அண்டார்டிகாவில் உள்ள கான்கார்டியா என்ற பகுதியில், பூமியின் தொலைதூரத் தளத்தை இயக்கும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) 12 உறுப்பினர்களைக் கொண்ட குழு அங்கு பயிற்சி எடுத்து வருகிறது.

கடுமையான நிலைமைகள் மனிதர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள பல்வேறு சோதனைகளை மேற்கொள்வதே இந்தக் குழுவின் பணியாகும்.

அத்துடன், “தூக்க ஆய்வுகள் முதல் குடல் ஆரோக்கிய அளவீடுகள், விண்வெளி போன்ற தீவிர சூழல்கள், தற்போதைய மற்றும் எதிர்கால ஆய்வாளர்களுக்கு ஏற்படும் சவால்களை ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு புரிந்துகொண்டு சமாளிப்பது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள, இந்த குழுவினர் தூண்டப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்” என்று ESA தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் குளிர்காலப் பயிற்சியாக இந்த ஆண்டும் அண்டார்டிகாவில் ESA வின் 12 உறுப்பினர்களை கொண்ட குழு பயிற்சி எடுத்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories